மதராசபட்டினத்தில்....
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் என்று ட்ரைலர் பார்த்த போதே சீக்கிரம் பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து இன்று காலை ஷோ போனோம் - மதராசப்பட்டினம் படத்திற்கு
எங்க ஊர்ல டிக்கெட் பால்கனி 60 ரூபாய் அது நமக்கு சரி பட்டு வராது,சரி முதல் கிளாஸ் 50 ரூபாயாம்(அதுவும் நான் கொடுக்கல),ஒரு வழியா டிக்கெட் எடுத்து உள்ள போயி ஒரு நல்ல சீட்ட போட்டு உக்காந்தோம்
அதெல்லாம் அப்பறம் சொல்றேன் எங்களை 1945 க்கு அழைத்து சென்ற மதராசபட்டினம் குழுவினருக்கு
ஒரு கோடி பாராட்டுக்கள் !!!
எனக்கு தெரிஞ்சி ஒரு மூணு பேர் விமர்சனம் ஏற்கனவே போட்டிருக்காங்க அதை பாருங்க
ஜெட்லி
டம்பி மேவி
மகேஷ் - ரசிகன்
படமும் போட்டாச்சி அங்கு நான் ரசித்தவைகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
* வேற எதுவுமே வேண்டாம் நம்ம கதாநாயகி ஏமியை பார்ப்பதற்க்ககாவே இந்த படத்த பாத்தாகணும்,அப்படியொரு அழகுங்க அந்த பொண்ணு ,லண்டன் இறக்குமதி -சான்சே இல்ல :)
கீழ இருக்காங்க பாருங்க,அடடா !
* டைட்டிலே வித்தியாசமாகத்தான் இருந்தது ,இந்திய வரைபடத்தில் கலைஞர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டதை போல இருந்தது
* 1945 சென்னை அதான் மதரசப்பட்டினத்தை என் கண்முன் வந்து நிறுத்தியிருந்தார்கள்,ஒரு எதிர்ப்பார்போடு பார்த்தேன்
* நம்ம நாயகி ஏமி கிழவியாக 2010-இல் கதை தொடங்குகிறது,நாயகியின் பேத்தி கூட நல்ல தான் இருந்தது granny granny என்று சொல்லிக் கொண்டு
* நம் நாயகன் ஆர்யா அசல் மல்யுத்த வீரராகவே மாறிவிட்டார்,அப்படியொரு எதார்த்தத்தை பார்த்தேன்
* நாயகிக்கு மொழி பெயர்ப்பாளாராக வரும் மறைந்த ஹனிபா அருமையான நகைச்சுவைகள் செய்திருப்பார் (அவர் இறந்துவிட்டார் என்பதே படத்தில் போட்ட பிறகு தான் எனக்கு தெரியும்,ரொம்ப மோசம் )
* ஹனிபா நம்ம நாயகிகிட்ட தனக்கு ஐந்து தாய் மொழிகள்(five mother tongues) என்பார்,அதற்க்கு நாயகி you mean five mothers,ஆங்கிலத்தில் வந்தாலும் செம சிரிப்பு தான் அந்த காட்சிகளில்
* முதல் பாதி அவ்வளவு காமெடி தாங்க,அசத்தல் !!
* மழை வரும் போது ஒருவர் மழை வருது,மழை வருது என்று கத்திக் கொண்டே ஓடுவதும் ,மேல ப்ளைன் போனா குண்டு போடறான் !! குண்டு போடறான் என்று கத்திக் கொண்டே ஓடுவதும் அந்த காலத்தை காட்டுகிறது ,சிரிப்பு தான்
* வெள்ளைய போலீசுக்கும் நாயகனுக்கும் ஒரு போட்டி நடக்கும்,உணர்ச்சி மிக்க போட்டியாக இருந்தது,ஆர்யா முதல் அடி அடித்ததும் எம்.எஸ்.பாஸ்கர் சொல்வார் "400 வருசத்துக்கு பிறகு நாம அடிக்கிற மொத அடி"
* ஏமி தமிழ் கற்றுக் கொள்வதும் ,ஆர்யா ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் செம கலாட்டா தான்
* இரண்டாம் பாதி அவ்வளவு வேகம்
* வெள்ளையர்களின் தந்திரங்களையும் நிறையவே காட்டி இருக்காங்க
* அப்பறம் இசை G.V.பிரகாஷின் அடுத்த மாஸ்டர் பீஸ் என்றே சொல்லவேண்டும் ,பின்னணி இசை அடடா ரகம் !!
* ரூப் குமார் பாடிய "பூக்கள் பூக்கும் தருணம்" வழக்கம் போல் உருக வைத்திருக்கிறார்
* இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த தருணத்தை அருமையாக படமாக்கியிருக்கிறார்கள்
* ஹரிஹரனின் குரல்களில் வரும் "காற்றிலே" பாடல்,ம்ம்ம் என்னவொரு உணர்ச்சிமயமான பாடல்
* நாயகனும்,நாயகியும் தப்பி ஓடிக்கொண்டிருக்கும் போது சுதந்திரம் கிடைத்ததை ஊரெங்கும் கொண்டாட்டத்தில் ஒரு முதியவர் ஏமிக்கு நம் தேசிய கோடியை குத்தி விடுவார் , அங்கு ஒரே கரகோஷங்கள் தான் !!!
* படம் முழுக்க முழுக்க பார்க்க வேண்டிய பொக்கிஷம் !!!
* நான் பார்த்த உணர்ச்சிமயமான படம்,விடுதலை உணர்வுகள் நம்மையும் துள்ளி குதிக்க வைக்கிறது
* கிளைமாக்சும் எதிர் பார்க்காதது தான்
* ISO(1945:2010) certified movie :)
* படம் முடிந்த பிறகு பழைய மதரசப்படினத்தையும்,இன்றைய மெட்ராஸ் சிட்டியையும் ஒப்பிட்டு காட்டுவாங்க,அதையும் மறக்காம பாருங்க
* நீங்க எல்லோரும் குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம் !!! முதல்ல படத்த போய் பாருங்க,நாளக்கி ஞாயிற்றுக் கிழமை தான் !!!
யாராவது அந்த ஏமி பொன்னு விலாசத்த தேடி கண்டுபுடிச்சி சொல்லுங்கப்பா
போய் ஜொள்ளு விடனும் :)
விமர்சனம் படு யதார்தமாக, சூப்பராக உள்ளது யோகேஷ்.
வாழ்த்துக்கள்.
மனோ
ஐயய்யோ அது விமர்சனமே இல்லங்க,நான் ரசித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான்
ஹா ஹா
வருகைக்கு நன்றி மனோ
padam paaththuttu comment poduren
மச்சி அந்த எமி தான் இப்ப கெழவி ஆய்டா டா !!!!!
வேணுனா ஆயோட பேத்தி விலாசம் தரட்டுமா !!!
என்ன மச்சி நீ நம்ம ஊர்லயே எத்தன பிகரு இருக்கு ?!?
அதெல்லாம் விட்டுட்டு வெள்ளகாரித்தான் வேணுமா ??
"அதுவும் அந்த பெடேர்மாக்ஸ்யே வேணுமா ??"
"இந்த தீபந்தம் அரிக்கன் லாம் வச்சிக முடியாது ?? "
http://amyjacksonofficial.blogspot.com/
இங்க போய் ஜொள்ளு விடனும்
http://www.amylouisejackson.com/
::)))
@குத்தாலத்தான்
//"அதுவும் அந்த பெடேர்மாக்ஸ்யே வேணுமா ??"//
அதுதான் வேணும் :)
என்ன மச்சி அவனவன் என் ஆளுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போரானாம்,நீ வேற கடுப்பேத்துற
@மின்னுது மின்னல்
ரொம்ப நன்றிங்க மின்னல
இத வெச்சே அந்த பொண்ணோட விலாசத்த கண்டுபுடிச்சி காதலிக்கனும் கண்டிப்பா :))
Nice :)
ஜில்லு..... ஏமி ஏமின்னு பகல் கனவு காணாத....
பழம் எனக்குத்தான்.
ஹனீஃபா வாய்ப்பே இல்லை....
எம்.எஸ் பாஸ்கர் சுதந்திரம் பத்தி வசனம் பேசுவாரே... அதுவும் நச்
Hey Jil,
Watch her official web page http://www.amylouisejackson.com
Then you will surely surrendered to her. LOL
நானும் படம் பார்த்தேன். மிக அருமை.
அந்த நாளைய காதல்.......
இன்றும் உணர்வுள்ளது.
மறைந்த நடிகர் ஹனிபாவுக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கலாம்..
படத்தை நானும் பார்கனும்பா பழைய மெட்ட்ராஸ் எப்படி இருந்தது என்பதை தெரிந்துகொள்ள ஆசை...!
நன்றி ரோமியோ :)
@மகேஷ் : ரசிகன்
//ஜில்லு..... ஏமி ஏமின்னு பகல் கனவு காணாத....
பழம் எனக்குத்தான்.//
யோவ் நான் நைட்லதான் கனவு கண்டேன் :)
ஏமி பதிவுல போயி என் காதல சொல்லிட்டேனே :(),இப்ப என்னா பன்னுவ
ப்ச் சினிமாஆஆஆஆஆ....
போங்க சார்...
@வில்சன்
அங்கதான் ரெண்டு நாளா ஜொல்லு விட்டுகிட்டு இருக்கேன் அண்ணே :)
நன்றி !!
@மஞ்சள் நிலா
நன்றிங்க :)
@வெறும்பய
கண்டிப்பா ஹனிஃபா அவர்களுக்கு சமர்ப்பனம் நண்பா
@rk guru
கண்டிப்பா பாருங்க படத்த :)
@pinkyrose said...
//ப்ச் சினிமாஆஆஆஆஆ....
போங்க சார்...//
என்ன இப்புடி சொல்லி புட்டீக :(
வாவ்.. அருமையா எளிமையான வார்த்தைகளில் எதார்த்தமா விமர்சனம் இருக்கு...யோகேஷ்.
கண்டிப்பா படம் பார்க்கணும் போல இருக்கு... பகிர்வுக்கு நன்றி..
ஏமி ஜாக்சன் அட்ரஸ் கிடைச்சதும் சொல்றேன்.. :D :D
நடத்து ராஜா நடத்து...ரசனை சூப்பர்மா..
படத்தில் இவ்வளவு பிடிச்ச விஷயம் இருக்குன்னாலே நல்ல படம்னு தெரியுது. :)
நீங்கள் சொன்னவிதம் உடனே படம் பார்க்க வேண்டும் தோன்றுகிறது.... நண்பா
Amy's blog...
http://amyjacksonofficial.blogspot.com/
her official website
http://www.amylouisejackson.com/contact.php
நீங்கள் குடுத்து வைத்தவர் சார், அந்த அழகு பதுமையை பெரிய திரையில் பார்த்து விட்டீர்கள், பொறாமையாக இருக்கிறது :-) படத்தின் டிரெயிலரை பார்த்ததுமுதல் படத்தையும் நாயகியையும் திரையில் பார்க்கவேண்டும் போல ஆசையாக இருந்தாலும் யாழ்ப்பாணத்து திரையரங்கங்கள் எவையும் மதராசப்பட்டினத்தை எடுக்கவில்லை. இரண்டு மாதங்கழித்து ஒரிஜினல் dvd யில்த்தான் பார்க்கலாம்.
யத்தார்தமா சொல்லி இருக்கீங்க ... பாத்துடுவோம்.
//வந்தே மாதரம் ! வந்தே மாதரம் என்று ட்ரைலர் பார்த்த போதே//
என்னது ஜில்லுக்கு அவ்வளவு தேசப்பற்றா :)
//ஏமியை பார்ப்பதற்க்ககாவே/நாயகியின் பேத்தி கூட நல்ல தான்//
அதானே பார்த்தேன் ;)
உங்களின் கருத்துக்கள் அத்தனையோடும் அப்படியே ஒத்துப்போகிறேன்..
சீக்கிரம் பார்க்கணும்
செமயா எழுதிருக்கீங்க...யோகேஷ்..சேம் ஃபீலிங்..நம்ம விமர்சனத்தையும் வந்து படிச்சுட்டு போங்க...
http://rameshspot.blogspot.com/2010/07/2010-madharasapattinam.html
உங்கள் கருத்துக்கு நன்றி யோகேஷ்..எல்லா விமர்சனத்தையும் படித்துவிட்டு நன்றாக இருந்ததால் மட்டுமே அவ்வாறு கமெண்ட் போட்டேன்..ஆனாலும் நீங்கள் சொல்வது புரிகிறது எனக்கு, இனி தவிர்த்துவிடுகிறேன்..நன்றி..
அந்தக் காலம்னா அந்தக் காலம் தான். எத்தனை பேர் வாசித்து இத்தனைப் பின்னூட்டம் ... இப்போ வாசிக்க ஆளே இல்லை... பின்னூட்டத்திற்கு வழியே இல்லை... :(