Showing posts with label ட்விட்டர். Show all posts
Showing posts with label ட்விட்டர். Show all posts

நானும் அந்த 140 எழுத்துக்களும்

என்னத்த சொல்றது போங்க, இப்பலாம் எது யோசிச்சாலும் சரி எழுதினாலும்  சரி எல்லாமே சின்னாதாவே வருது,பரிட்சையில 16 மார்க் கேள்விக்கும் ரெண்டு மார்க் கேள்விக்கும் ஒரே அளவு பதில் தான் வருது

எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்,அவன்தாங்க ட்விட்டர் , இனி பரிட்சை கேள்வி தாளில் எல்லா வினாக்களுக்கும் 140 எழுத்துக்களில் விடையளின்னு   இருந்தா கூட தேவலாம் என்கிற அளவுக்கு என்னை ட்விட்டர் அடிமையாக்கி இருக்கிறது

நிறைய மொக்கை கவிதலாம் எழுதுறன் அதுக்கு காரணம் "அவள்" இல்ல ட்விட்டர் தான்,இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா என்னோட பதிவும் 140 எழுத்துக்கு சின்னதா  ஆனாலும் ஆகும்

ட்விட்டர் இன்னக்கி இணையத்தின் இன்றியமையாததாகிவிட்டது, ட்விட்டருக்கு  முன் கூகுளின் ஆர்குட்டும்,மூஞ்சி புத்தகமும் டம்மி பீசுகளாய் வளம் வந்து கொண்டிருக்கின்றன (இன்னமும் யாராவது ஆர்குட் யூஸ் பண்றீங்களா என்ன :) )


எது நடந்தாலும் ஊருக்கு முன்னாடி  முதல்ல ட்விட்டேருக்கு சொல்லிடுறேன், வாந்தி வந்தாலும்  சொல்றன், பூந்தி தின்னாலும் சொல்றன், மொத்ததுல ட்விட்டர் ஒரு குட்டி நண்பன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி வந்தது வந்துட்டீங்க சில பல  ட்விட்டுகளை   படிச்சிட்டு போங்க :)

@@ அவள் அன்று கண்களால் கடித்ததால் ஏற்ப்பட்ட காதல் புண் இன்று வடுவாகியும் சுகமாய் வலிக்கிறதே #காதல் சுகம்

@@ போன வாரம் சுட்ட ஊசிப் போன வடையை கூட சகித்து சாப்பிட்டு விடுவேன் இந்த பாழாய் போன பீசாவை எவன் திம்பான் #பிசா கார்னரின் கார்னரில்


@@ அன்று என்னவளின் ஏகாந்த சிரிப்பினில் ஏழையாய் ஏமாந்து போனதன் விளைவு இன்று என்னையே எனக்கு எவனென்று தெரியாமல் எத்தனிக்கிறேன் #toolate   
 
@@ தோழியிடம் மீசையை எடுத்தால் கமல் மாதிரி இருப்பேனா என்றேன்,ஆம் என்றாள் எடுத்துவிட்டேன் அப்பரம் தான் சொல்கிறாள் அது "குணா" கமல் என்று #அழகு
 
@@ மூன்று வருடம் முக்கி முனகி அவள் முன்னால் மண்டியிட்டு மாரடித்த மணித்துளிகளில் மரணித்து மக்கியிருந்தால் மனிதனாயிருக்கலாம் #toolate   

@@ அவளின் நினைவலையின் எச்ச சொச்சங்களை பொறுக்கி பொட்டலம் போட்ட நேரத்தில் அப்பா கடையில் பொட்டலம் போட்டிருந்தால் எப்பவோ பொழச்சிருக்கலாம் #toolate 

@@ என்னதான் செக்க செவேலுன்னு இருந்தாலும் சேட்டு பொண்ணுங்கள பாத்தா ஜொள்ளு விட தோணல #என்னுமோ தெர்ல

விஜயும் தமிழனும்

வேலாயுதம்.....ஆரம்பம்


வேலாயுதம் - என்ன இது கழுகா,மைனாவா,இல்ல மடயானா (அதேதான்)
என்ன எழவோ சின்ன புள்ளங்க பயப்புடாம இருந்தா சரி.....

இதுவரை ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த விஜய்....
இந்த படத்தில் அவரே இறக்கை கட்டி பறப்பார் என எதிர்பார்கப்படுகிறது(ஹா ஹா ஓடுங்க)

தமிழனென்றால் யார் ?

இதற்கு ட்விட்டரில் ஒரு வரியில் கிடைத்த பதில்கள்

iamkarki

பொழுதுபோகலன்னு தமிழனையே கிண்டல் பண்ணி பேசுறவன் தான் உண்மையான தமிழன் #தமிளன்

kangon

தமிழை வாழ்த்தும் மாநாட்டில் ஆங்கிலத்தில் கதைத்து தன் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்துபவன் #தமிளன்

kusumbuonly

ஆக்ஸ்வலி
என்னாது இது? இதை எப்படி செய்வாங்க என்று அரிசியை பார்த்து கேட்பவன் தான் தமிழன் # தமிளன்

kaattuvaasi

"மானாட மயிலாட" பாக்கும்போது யாராவது வேட்டிய உருவுனாக்கூட "ஆடாம அசையாம" உக்காந்து இருக்குறவன்தான் தமிழன் #தமிளன்

gkarthy1

தன் மூஞ்சியை கண்ணாடில பார்க்காம விஜயகாந்த்தையும் T.Rரையும் கிண்டலடித்துக் கொண்டிருப்பவன் #தமிளன்

aayilyan

தன்
புடிச்ச முயலுக்கு த்ரீ லெக்ஸ் ஒன்லின்னு சொல்றவன் #தமிளன்

jillthanni

தமிழ் என்ற ஒரே வார்த்தைக்கு 500 கோடி செலவு செய்பவன் #தமிளன்

நீங்க சொல்லுங்க தமிழன் யாருன்னு ? பின்னூட்டத்தில்

ட்விட்டரில் ரசித்தவை (04-07-2010)

இந்த ட்விட்டரில் நச்சுன்னு நாலு வார்த்தையில் பலர் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்,அவற்றில் நான் ரசித்த ட்வீட்கள் சில


அதிஷா(athisha@twitter.com)

தோனிக்கு நிச்சயதார்த்தம் ஆகிருச்சாமே! அய்யோகோ தானைத்தலைவி லட்சுமி ராய் இனி என்ன செய்வாங்க!

ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே ஏத்த வந்தோம் மாவிளக்கு எங்க குறைய நீ விலக்கு - go #spa go!

விஜயசாந்திய கைது பண்ணிட்டாய்ங்களாம்.. ஏய் ஏய்.. சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா.

காட்டுவாசி(kaattuvaasi@twitter.com)


நண்பரொருவர் திருமணநாள் என்று இனிப்பு கொடுத்தார். எத்தனையாவது கல்யாணநாள் என்று நான் கேட்க,ஒரே ஒரு கல்யாணம்தான் சார் பண்ணியிருக்கேன் என்றார்

தமிழகம் முழுதும் போலி டாக்டர்கள் கைது : அப்படியே போலி எழுத்தாளர்களையும் கைது பண்ணுங்க சார்... உங்களுக்கு புண்ணியமாப்போகும்...

பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கப் போன பைத்தியக்கார வைத்திக்கு பைத்தியம் எழுதினத படிச்சு பைத்தியம் புடிச்சிடுச்சாம்

யூத்துன்றது யாரு?? செத்துப்போய் நரகத்துக்கு போனாலும் கூட வர்ற நண்பனை சொரண்டி "மச்சான்... எமனோட பொண்ணப்பாருடா..ம்ஹீம்" அப்படின்றவன்தான்.


ஜில்தண்ணி (இது நான் தானுங்கோ-jillthanni@twitter.com)


இப்ப சிவப்பு சாமியும் மாட்டிக்கிச்சா,சூரியனுக்கு ஒரு வீடியோவும் கிடைக்கலையாம் அதான் இப்படியா...

சீக்கிரம் யாராவது கேட்ச் பிடிங்கயான்னா மாட்டேன்குரானுவோ ,என்னுமோ கால்ப்பந்தாமே,சரி கேட்ச் வேணாம் போல்டு ஆக்கிட வேண்டியதுதானே

அவள் மழையில் நனைந்து வந்த போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது காதலின் மேல் அல்ல அவ மேக்கப்பின் மேல்--கலையவே இல்லயே
பதிவுப் படம்



ஆஹா எம்மாம் பெரிய கை,இது கால் பந்தாசே (ஹி ஹி ஹி )

Related Posts with Thumbnails