தோழி(கள்) தேவை

தோழியை அப்டேட்டாக வைத்திருக்கும் அண்ணன் கார்க்கி இப்போது மணமகளை தீவிரமாக தேட ஆரம்பித்திருக்கிறார்,இனி அவர் தோழியை அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது என்பதால்,நான் அந்த பணியை சிரம் மேற்கொண்டு தொடரலாம்னு நினைக்கிறேன்(நீங்க என்ன சொல்றீங்க)

சாப்டியா டா,குளிச்சியா டா,படிச்சியா டா,என்ன படம் பாக்குற?, டேய் தூங்கு மூஞ்சி ! ,இப்டில்லாம் குறுஞ்செய்தியில் நண்பர்களின் தோழிகள் அனுப்புறதும்,போன் பண்ணி ஜாலியா கலாய்ப்பதும் பார்த்தா,எனக்கு ஒரே  
stomach fire ஆயிடுது (எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா பின்ன)

எவ்வளவு நாள் தான் நாமளும் இருக்குற மாதிரியே சீன் போடுறது (அப்ப ஒரு கேர்ள் ஃப்ரெண்டும் இல்லயா)

அதனால் சரி நாமளும் ஒரு தோழிய கண்டுபிடிக்கலாமுன்னு ட்விட்டர்,ஆர்குட்,ஹை 5  ன்னு போகாத இடம் கிடையாது ,கும்பிடாத பெண் தெய்வங்கள் கிடையாது

ஆர்குட்ல கிடச்ச ரெண்டு தோழிகள்ட ஆர்வக் கோளாருல ஆன்லைனில் chat செய்தேன்,விளைவு ஆன்லைனிலேயே செருப்பு வந்ததுதாங்க மிச்சம்(ஒன்ணே ஒன்னு தான் வந்தது)

அதனால் இப்ப கேக்குறது என்னன்னா ஒரே ஒரு நல்ல தோழி ( நாளைந்து பேர் மட்டும் கிடைத்தாலும் பரவாயில்ல),அதுக்கு இந்த பயடேட்டா


பெயர்                    :          யோகேஷ்வரன்

(தோழிக்கு    பெயரே    இல்லனாலும்   பரவாயில்ல  அம்மு,பம்முனு  எதாவது     வச்சி கூப்டுக்குறேன்)

வயசு                     :          வாலிப வயசு 20
                                            (தோழிக்கு 18 to_ _ இருந்தா தேவலாம்)

தொழில்               :         இன்னும் படித்தே முடிக்கல 
                                            (தோழியும் அப்டியே )

பாலினம்             :         ஆண் 
                                           (தோழி கண்டிப்பா பொண்ணாதான் இருக்கனும் : ) )

ஊர்                        :          தமிழ்நாடு 
                                          (தோழி யூ.எஸ் -ல இருந்தாலும் பரவாயில்ல)

குணம்                  :          ஊருக்குள் நல்லவன் மனதில் _ _ _வன் 
                                           ( தோழி வில்லியாக கூட இருக்கலாம்)

உயரம்                 :         ஷூ போடாமலே 6 அடி ஆம்பள
                                          ( தோழிக்கு ஹீல்சு அலவன்சு உண்டு) 

பொழுதுபோக்கு  :   பந்து பொறுக்கி போடுறது(கிரிக்கெட்டாமே),புத்தகத்தில்
                                        ஸ்டில் பார்ப்பது

(தோழிக்கு பொழுதுபோக்குன்னு ஒன்னுமே இல்லனாலும் பரவாயில்ல அதுக்குதான் நான் இருக்கேனே)

நல்ல பழக்கம்    :       அப்பாவி போல ஊர்ல மூஞ்ச வச்சிக்கிறது 
                                          (தோழிக்கு சீக்ரட் சொல்லித் தரப்படும்)

கெட்ட பழக்கம்  :       மொக்கை போடுவது 
                                          (தோழியிடம் இது இருக்க கூடாது)

நம்புவது               :        இதுவரை என் கண்'னை மட்டும் 
                                          (வா தோழி உன்னை )
நம்பாதது             :         என்னையும் சேர்த்து 
                                          (தோழி(கள்)யை மட்டும் நம்பலாம்னு இருக்கேன்)

பிடித்த இடம்     :         கோவில் (அங்காவது எதாவது??? கிடைக்குமான்னுதான்)

சமீபத்திய சாதனை :  முழுசா அரை மணி நேரம் சுழிய ஒரே இடத்தில் அமர  
                                              வைத்திருப்பது(இங்க பதிவுல தான்) 

நீண்ட கால சாதனை : என் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது : ( 
                                              ( தோழி(கள்) பயப்பட வேண்டாம்  Fair and Handsome
                                                வாங்கி பயன்படுத்துறேன் இன்றிலிருந்து)

உறுதிமொழி :

கிடைக்கும் தோழி(கள்)யிடம் என் பதிவை படிக்க சொல்லி கொடும படுத்த  மாட்டேன் என்று இந்த பதிவின் மூலம் உறுதியளிக்கிறேன்


டிஸ்கி : 1 :  இது காமெடிக்கு அல்ல,மெய்யாலுமே எனக்கு தோழி(கள்) வேனுங்க

டிஸ்கி : 2 : ஆர்வமுள்ள  தோழி(கள்) இங்கோ,என் மின்னஞ்சலிலோ, ட்விட்டரிலோ, தெரிவிக்கவும்(வெக்கமா இருந்தா  சொல்லுங்க நாம போன்ல பேசிக்கலாம்)   

டிஸ்கி : 3 :  ஏமி ஜாக்சன் இங்கு வந்து தன்னை தோழியாக ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சினாலும் கதறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்(அவள வேற லிஸ்ட்ல வச்சிருக்கேன்)

டிஸ்கி : 4 :  பதிவுலக நண்பர்களே உங்களுக்கு தெரிந்த எதாவது நல்ல,கெட்ட பொன்னுங்க இருந்தாலும் சொல்லி உதவி பண்ணுங்க : )

குறிப்பு : இதன் மூலம் ஒரு தோழியாவது கிடைத்தால் பின்னூட்ட குலசாமிக்கு கோழி அறுத்து படைக்கிறேன்


51 Response to "தோழி(கள்) தேவை"

 1. //தோழிக்கு சீக்ரட் சொல்லித் தரப்படும்//

  எனக்கும் சொல்லிக் கொடுங்க குரு.

  Jey says:

  ம்ஹூம், நீரு தேர மாட்டீரு ஒய்.

  ///கெட்ட பழக்கம் : மொக்கை போடுவது (தோழியிடம் இது இருக்க கூடாது)///

  என்ன மாப்பி இத போய் கெட்ட பழக்கம்னு சொல்லிட்டியே .. நமக்கு தெரிஞ்சதே அது ஒண்ணுதானே ..!!

  கல்யாணம் செய்யவேண்டும் என்றால் நேரடியா சொல்லவேண்டியது தானே

  ரைட்டு.....

  @சௌந்தர்

  ///கல்யாணம் செய்யவேண்டும் என்றால் நேரடியா சொல்லவேண்டியது தானே ///

  இது தோழி தேடும் படலமுங்க :)

  கண்ணாலமாஆஆஆஆ ஐயயோ

  ஏன் இப்படி.... ?

  உங்களுக்கு தோழிகள் அதிகமாக வரும் பட்சத்தில் எனக்கு பார்வார்ட் பண்ணுங்க. ஹி! ஹி!

  தோ வரேன்... நான் கூட உன் போன பதிவு பாத்து (மன்னர்கள் பற்றிய பதிவு... அருமை) திருந்தி நல்லவன் ஆகிடியோ நினச்சேன்... இப்போதான தெரியுது புலி எதுக்கு பதுங்குசின்னு... உன் உண்மையான தோழி உன் ப்ளாக் (பயத்துல) படிக்க மாட்டங்க சொல்லி... இப்படி ஒரு விளம்பரமா?? (வேலை முடிஞ்சுது).

  பயபுள்ள ரொம்ப பீல் செஞ்சு பொலம்பி இருக்கு.. இங்க படிக்கவர நல்ல உள்ளங்கள் "நான் உன் தோழி ஆகுறேன் " சொல்லி ஒரு கமெண்ட் போட்டு அதை ஜில்லு படிக்கறதுக்கு முன்னாடி கலைத்துவிடுங்கள்...

  ///உங்களுக்கு தோழிகள் அதிகமாக வரும் பட்சத்தில் எனக்கு பார்வார்ட் பண்ணுங்க. ஹி! ஹி ////

  தெய்வாதினமா அப்டி நடந்தா கண்டிப்பா உங்களுக்கு ஃபார்வட் செய்யப்படும் :)

  @டெர்ரர்

  //// பயபுள்ள ரொம்ப பீல் செஞ்சு பொலம்பி இருக்கு.. ///

  அதேதான் அதேதான் உங்களுக்காவது இது புரிஞ்சுதே :)

  ///ஜில்லு படிக்கறதுக்கு முன்னாடி கலைத்துவிடுங்கள்... //

  உங்கள் மாதிரி ஆளுங்க இருப்பாங்கன்னு தெரிஞ்சிதான் மெயிலும்,ட்விட்டும் செய்யலாம்னு சொல்லிருக்கேன் :)))

  டிஸ்கி : 3 : ஏமி ஜாக்சன் இங்கு வந்து தன்னை தோழியாக ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சினாலும் கதறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்(அவள வேற லிஸ்ட்ல வச்சிருக்கேன்)

  //


  வேற லிஸ்ட்ன்னா அது எந்த லிஸ்ட் நண்பா...

  ///வேற லிஸ்ட்ன்னா அது எந்த லிஸ்ட் நண்பா...////


  அவ அல்ரெடி மனசுல இடம் புடிச்சி காதலி ஆயிட்டா(காதலிகள் லிஸ்ட்ல இருக்கா)

  இங்க நான் கேக்குறது
  தோழி

  Riyas says:

  ஏப்பா ஜில்லு.. என்னா இது. தோழி வேனும்னு விளம்பரம் எல்லாம் போட்றியே..

  என்னாயிரிச்சி திடிறுன்னு...

  சொர்ணக்கா ஓக்கேவா..

  ஆஹா இது என்ன புது வியாதியா இருக்கு !

  ஆமா பதினெட்டு வயதில் தோழிகள் வேண்டுமா !????????????????????????????????????????????????????

  இது சரின்னு தெரியலையே!

  என்னது எமி குட்டியை நீங்க வைச்சு இருக்கீங்களா ????

  சோதனை மேல் சொன்தனை போதுமாடா சாமி .....

  எனக்கும் தோழிகள் தேவை....கட்டாயம் அவளிடத்தில் கவிதை சொல்ல மாட்டேன்

  தம்பி யோகேஷ், எப்படிப்பா இப்படி எல்லாம், உட்கார்ந்து யோசிப்பீங்களோ..அருமை தம்பி, நிச்சயம் கிடைப்பாங்க தோழி உனக்கு, அந்த அளவுக்கு எழுதி விட்டு இருக்க ...
  வாழ்த்துக்கள்

  இதுக்கேல்லாமா விளம்பரம்..........

  உன் கஷ்டம் புரியுதுப்பா.....

  ஜில்லு இங்க Belfast la நிறைய தோழிகள் இருக்காங்க. உங்களுக்கு okva?

  ///ஜில்லு இங்க Belfast la நிறைய தோழிகள் இருக்காங்க. உங்களுக்கு okva? ///

  அது என்ன நண்பா belfast ??

  என்னன்னு சொல்லுங்க அப்பரம் சொல்றேன் என் முடிவ(ரொம்ப உசாரான ஆளு)

  Belfast is the Capital city of the country Norther Ireland. Very Very nice Country and the city...

  //Belfast is the Capital city of the country Norther Ireland. Very Very nice Country and the city ///

  எனக்கு டபுள் ஓ.கே
  (அதான் யூ.எஸ்ல இருந்தாலும் பரவால்லன்னு சொன்னேனே)

  மற்றவை நாம chatல பேசியபடியே நடக்கட்டும் :)

  இத படிச்சும் தோழி கிடைச்சா, வாழ்த்துக்கள்

  ஹிஹிஹி

  உனக்கு தோழி மட்டும் இல்ல, சாப்பிட கோழி கூட கிடைக்காது :))

  I really like this post... Keep it up... I'm sure you will get some (??) girl friends. you have that quality. Best of Luck

  @கொல்லான் said...

  ///எனக்கும் சொல்லிக் கொடுங்க குரு. //

  உங்களுக்கில்லாததா,வாங்க சொல்லித் தாரேன் :)

  @Jey said...

  // ம்ஹூம், நீரு தேர மாட்டீரு ஒய்.///

  என்ன இப்டி சொல்டீங்க :) சரி பாப்போம்

  @ப.செல்வக்குமார் said...

  //என்ன மாப்பி இத போய் கெட்ட பழக்கம்னு சொல்லிட்டியே .. நமக்கு தெரிஞ்சதே அது ஒண்ணுதானே ..!! ///

  இதுக்கு பதில் chat-ல சொல்றேன் :)

  @ அகல்விளக்கு said...

  /// ரைட்டு.....///

  அப்ப எதாவது கிடைச்சிடுமா :)ரைட்டு

  @சங்கவி said...

  //ஏன் இப்படி.... ?///

  இதுக்கு நான் காரணம் இல்லணே :) என் வயசு தான் :)

  @ Riyas said...

  ////ஏப்பா ஜில்லு.. என்னா இது. தோழி வேனும்னு விளம்பரம் எல்லாம் போட்றியே..

  என்னாயிரிச்சி திடிறுன்னு...
  சொர்ணக்கா ஓக்கேவா.. //

  திடீர்னுல்லாம் இல்ல,ரொம்ப நாளா மனசுக்குள்ள புழுங்கிட்டு இருந்தன்,இப்ப சொல்லிட்டன் :)

  சொர்னாக்காவா அவுங்க தான் அக்காவாச்சே :)

  @!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  ///ஆஹா இது என்ன புது வியாதியா இருக்கு !
  ஆமா பதினெட்டு வயதில் தோழிகள் வேண்டுமா ////

  ஆமாம் நண்பா வியாதி புதுசா இருக்கு :)

  எனக்கு 20 உனக்கு 18 :) அதேதான்

  @அருண் பிரசாத் said...

  /// இது சரின்னு தெரியலையே!///

  எனக்கு சரின்னு பட்டுது ,அதான் :)

  டம்பி மேவீ said..

  ///என்னது எமி குட்டியை நீங்க வைச்சு இருக்கீங்களா ????

  சோதனை மேல் சொன்தனை போதுமாடா சாமி .....

  எனக்கும் தோழிகள் தேவை....கட்டாயம் அவளிடத்தில் கவிதை சொல்ல மாட்டேன் ////

  ஆமாங்க ஏமி இங்கதான் இருக்கா :)

  உங்களுக்குமாஆஆஆ ??? வேணும்

  @விஜய் said...

  //தம்பி யோகேஷ், எப்படிப்பா இப்படி எல்லாம், உட்கார்ந்து யோசிப்பீங்களோ..அருமை தம்பி, நிச்சயம் கிடைப்பாங்க தோழி உனக்கு, அந்த அளவுக்கு எழுதி விட்டு இருக்க ...
  வாழ்த்துக்கள்////

  இப்டியாவது கிடைக்குமான்னுதான் இந்த ஆயுதத்த பயன்படுத்திருக்கேன்,பாப்போம் :)

  @ஜீவன்பென்னி said...

  //// இதுக்கேல்லாமா விளம்பரம்..........
  உன் கஷ்டம் புரியுதுப்பா.....///

  என் கஷ்டம் உங்களுக்காவது புரிஞ்சுதே,சந்தோசம் :)

  @கலாநேசன் said...

  ///இத படிச்சும் தோழி கிடைச்சா, வாழ்த்துக்கள்///

  கிடைச்சா கண்டிப்பா சொல்றேங்க :)

  @@கார்க்கி said...

  ////ஹிஹிஹி

  உனக்கு தோழி மட்டும் இல்ல, சாப்பிட கோழி கூட கிடைக்காது :)) ////

  கிடைக்காதாஆஆஆ
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

  ஆசிர்வாதத்துக்கு நன்றி :)

  முனியாண்டி said...

  ///I really like this post... Keep it up... I'm sure you will get some (??) girl friends. you have that quality. Best of Luck ////

  அப்ப கிடைச்சிடுமா கிடைச்சிடுமா :)

  ரைட்டு

  (இதுல எதும் உள்குத்து இல்லயே)

  சீ நீ ரொம்ப மோசமான பையன்...

  This comment has been removed by the author.

  ஜில்லு உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா :)
  உங்க ஆசை படி நானும் ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன்

  Anonymous says:

  //ஆர்குட்ல கிடச்ச ரெண்டு தோழிகள்ட ஆர்வக் கோளாருல ஆன்லைனில் chat செய்தேன்,விளைவு ஆன்லைனிலேயே செருப்பு வந்ததுதாங்க மிச்சம்//

  ஹா ஹா ஹா

  //வயசு : வாலிப வயசு 20//

  நம்பிட்டேன்..

  //தோழி யூ.எஸ் -ல இருந்தாலும் பரவாயில்ல//

  ம்ம்கும்.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல

  //ஏமி ஜாக்சன் இங்கு வந்து தன்னை தோழியாக ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சினாலும் கதறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்//

  எப்படியாவது அவங்கள பரியமனசு பண்ணி ஏத்துக்கங்க..

  அட சாமி.. இது உலக மகா நடிப்பு டா..

  கவலைப்படாத ஜில்லு... உனக்கு சீக்கிரமே நல்ல தோழியா (அது யாரோட தோழியா இருந்தாலும் சரி) கிடைக்க வாழ்த்துக்கள்.

  @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //சீ நீ ரொம்ப மோசமான பையன்... //

  அண்ணே என்ன இப்டி சொல்லிட்டீங்க ?
  சரி சரி விடுங்க,இதெல்லாம் ஒரு யூத் வாழ்க்கையில சகஜம்தானே

  @ Maduraimohan said...

  /// ஜில்லு உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா :)
  உங்க ஆசை படி நானும் ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன் ////

  ஆமாங்க மோகன் இப்ப அளவில்லாம போயிடுச்சி,கண்ட்ரோல் கண்ட்ரோல் :)

  ஐ பிளாகா நீங்களா :) சந்தோசம் வந்துட்டோம்

  @ Indhira said...

  /// நம்பிட்டேன்.. //

  நம்புங்க மெய்யாலுமே வயசு அதாங்க ஆகுது,அடுத்த பதிவுல birth certificate இனைக்கப்படும்

  அப்பவாவது நம்புங்வீங்களா :)


  ////எப்படியாவது அவங்கள பரியமனசு பண்ணி ஏத்துக்கங்க..

  அட சாமி.. இது உலக மகா நடிப்பு டா.. ///

  நீங்க சிவாரிசு பண்ணுனாகூட அவள ஏத்துக்க மாட்டேன்,ஆமாம்

  என்னது நடிப்பா,பீலிங்க்ச வெளியே சொன்னா நடிப்பா :)

  அட ராமா :) உங்களுக்கு இத புரிய வைக்க ??

  @ மகேஷ் : ரசிகன் said...

  ////கவலைப்படாத ஜில்லு... உனக்கு சீக்கிரமே நல்ல தோழியா (அது யாரோட தோழியா இருந்தாலும் சரி) கிடைக்க வாழ்த்துக்கள். ////

  நல்ல வார்த்தையா சொன்ன மாம்சு :)

  MANO says:

  NICE POST YOGESH...


  MANO

  நல்ல ஐடியாவா இருக்கே! நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்

Related Posts with Thumbnails