பெரியவரின் பக்குவம்...


இன்று காலையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

நேற்றிலிருந்தே என் நண்பன் ஒருவன் தங்கள் வீட்டுக்கு வருமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தான்,சரி இன்னக்கி போவோம் என்று கிளம்பிச் சென்றேன்

அவன் வீட்டுக்கு சென்று மத்த நண்பர்களுடன் அளவளாவிவிட்டு , ஜில்லுன்னு ஒரு ஐஸ்கிரீம் சாபிட்டோம்

அப்போது மணி மதியம் 1.30 ஆகிவிட்டது ,சரி மச்சான் மணி ஆயிடிச்சி வீட்டுக்கு கிளம்புறேன் டா என்று அணைத்து நண்பர்களுக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி கிளம்பினேன்

ஒரு தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தது,ஏறி கடைசி சீட்டில் ஒரு பெரியவர்க்கு அருகில் உட்கார்ந்தேன்

அப்போது ஒரு பருமனான வாலிபர் பஸ்சில் ஏறி படியிலேயே நின்றார்

சற்று நேரத்தில் இன்னொரு இளைஞன் ஏறி அந்த படியில் நிற்பவரை பார்த்து ,டேய் மேல ஏறுனா இன்னா கொறஞ்சா போவ போற என்று அதட்டல் மொழியில் சொன்னான்

அந்த வாலிபரும் நான் இங்கே தான் நிப்பேன் ,இன்னா பண்ணனும் இப்ப என்று கொஞ்சம் அசால்டாக பேசினான்

நடத்துனர் வந்து சொல்லியும் கேட்கவில்லை....

அப்போது அந்த பெரியவர் , தம்பி நீங்க கோச்சிக்க பிடாது ,வயசானவன் வெயில் தாங்கல கொஞ்சம் மேல ஏறி வந்தால் காத்து வரும் என்று அவரை தட்டி கொடுத்தார்

தப்பா நினைச்சுகாதீங்க என்று மறுபடியும் சிரித்துகே கொண்டே அந்த வாலிபரிடம் கூறினார்

இவ்வளவு நேரம் படியில் அடம் பிடித்துக் கொண்டிருந்த அந்த வாலிபர் சட்டென்று மேலே ஏறி பஸ்சின் நடு பகுதிக்கு சென்று விட்டு சிரித்து கொண்டே அந்த பெரியவர்க்கு தலை ஆட்டினார்.

இவ்வளவையும் பார்த்து கொண்டிருந்தேன் நான்

மனசுக்குள்ளே பேசிக் கொண்டேன்

இதுதான் பக்குவமா... முதிர்ச்சியா .. என்று அந்த பெரியவரை நினைத்து வியந்தேன்

சாதாரண மேட்டர் தான் .. அந்த தட்டி கொடுத்து இனிமயோடும்,பண்போடும் நடந்து கொள்ளும் அந்த பக்குவமும்,முதிர்ச்சியும் எனக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்

அதை வளர்த்துக் கொள்வேன் கண்டிப்பாக, நீங்களும் பக்குவமடையுங்கள்

வாழ்வில் மகிழ்ச்சி பூக்கட்டும்....

4 Response to "பெரியவரின் பக்குவம்..."

 1. உண்மைதான்!!!
  அன்பினால் எதையும் சாதிக்க முடியும்.

  எனது தொடர்பதிவில் உங்கள் பேரையும்
  இணைத்துள்ளேன், தொடர உங்களை
  அன்போடு அழைக்கிறேன்.

  நன்றி சை.கொ.பு
  தொடர் பதிவில் சந்திக்கிறேன்

  உண்மைதான்! வயது சில பக்குவங்களை மனிதனுக்கு ஏற்படுத்தி விடுகிறது!
  வயதானவர்கள் அனுபவம் சேகரித்த
  வைரக்குடங்கள் நண்பரே!

  கருத்துக்களுக்கு நன்றி அண்ணாமலை சார்

Related Posts with Thumbnails