இன்று படித்தது...

இன்று எங்க ஊரு நூலகத்துக்கு சென்றேன்,நிறைய புத்தகங்கள் நன்றாகவே இருந்தது,அங்கு இடையில் ஒரு புத்தகத்தில் ருத்ரன் என்ற பெயரை படித்தேன்,நான் ஏற்கனவே டாக்டர் ருத்ரன் அவர்களின் பதிவை பார்த்திருப்பதால்,அந்த புத்தகத்தை சட்டென எடுத்து படிக்க ஆரம்பித்தேன்

அந்த புத்தகத்தின் பெயர் " தேவைகள் ஆசைகள் " என்று இருந்தது,ருத்ரன் அவர்கள் ஒரு சைகாலகிஸ்ட் என்பது அனைவரும் அறிந்தது,சரி அப்படி என்ன இருக்கிறது என்று மேலும் படிக்க ஆரம்பித்தேன்.

அந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இரு விஷயங்கள் பற்றி சொல்கிறேன்
உயர்ந்த லட்சியங்களுக்காக உழைப்பவர்கள் இருக்கிறாகள் உலகெங்கும் சாகச சாதனைகள் நிகழ்கின்றன நீ நீயாகவே இரு

இந்த கருத்தின் மூலமே "நீ நீயாகவே இரு" என்பது தான்
நம் பதிவுலகத்தை எடுத்துக் கொள்வோம்,நான் எனக்கு தெரிந்த,புரிந்த அனுபவித்த கருத்துக்களை தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்,அதை விட்டு விட்டு,வால் பையனை போல்,சேட்டைக்காரனை போல்,எழுத முயற்சித்தால் அது வேலைக்கு ஆகாத ஒன்று.

மனித மூடர்களாக இருப்பவர்களிடமும் சொல்வதற்க்கு அவர்களிடம் ஒரு கதை உண்டு

இந்த கருத்திலும் அவ்வளவு உண்மை பொதிந்திருக்கிறது,கண்டிப்பாக ஒவ்வொரு மனிதரிடமும் நாம் கற்றுக் கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கும்,வாழ்கையும் அப்படித்தான் நாம் ஒடிக்கொண்டு மட்டும் இருக்க கூடாது,சுற்றத்தை கவனித்துக் கொண்டு தான் ஒட வேண்டும்.

அப்பாடா இப்பவே கண்ண கட்டுதே என்று நீங்கள் சொல்வது எனக்கும் கேட்டு விட்டது,சரி சரி புரியுது ,அத விடுங்க இங்க வாங்க..

நம்ம நித்யா ரஞ்சி இருக்குற இடத்த சொல்லிட்டாராமே...
உங்களுக்கு தெரியுமா..

இப்பவும் கடுப்பா இருக்கா ,கீழ பாருங்க


எத்தன சுத்துதுன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க
கண்டுபிடிகிறவர்களுக்கு ஒரு சொம்பு ஜில்லதண்ணி பரிசாக கொடுக்கப்படும்

6 Response to "இன்று படித்தது..."

  1. Chitra says:

    எளிய விஷயங்களை அருமையாக சொல்லி இருக்கிறார். அவற்றை எங்களோடும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    எத்தன சுத்துதுன்னு தேரியலிங்கோ...ஆனா தலைய மட்டும் சுத்துதுன்னு தெளிவா சொல்லிக்கிரேனுங்கோ .... ஹ..ஹஹ்...ஹா....

    நல்ல கருத்துக்கள் ஜில்தண்ணி...

    // "நீ நீயாகவே இரு" //

    ரொம்ப நல்லா விஷயம்.. பிடிச்சிருக்கு..
    பகிர்வுக்கு நன்றி..

    ஹலோ.. அப்புறம் ஒரு முக்கிய விஷயம் சொல்லாம போய்ட்டேன்..

    ஏன் இந்த கொலை வெறி...

    எத்தன சுத்துது?? எங்க சுத்துதுன்னு??

    நல்ல கேக்குறாங்க கேள்விய??

    (நான் அவள் இல்லை.. :-) )

    ஆமா நல்ல அறிவுரைகள் - நீ நீயாகவே இரு - கற்றுக் கொள் ஒவ்வொருவரிட்மிருந்தும்

    நல்வாழ்த்துகள் ஜில்தண்ணி
    நட்புடன் சீனா

Related Posts with Thumbnails