பத்துப் படங்கள் (தொடர் பதிவு)

முதலில் என்னை இந்த தொடர் பதிவிற்க்கு அழைத்த சைவகொத்துபரோட்டா அவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

என் நெஞ்சில் நிற்கும் அந்த 10 படங்கள்....


"நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பு இல்ல" என்ற வார்தைகள் தான் என்னை ஈர்த்தது,கமல் அவர்களின் நடிப்பு எப்போதும் போல போலித்தனமில்லாமல் இருந்தது,"நிலா அது வானத்து மேல" பாட்டு சுப்பர் ஆட்டம்,நாயகன் ஒரு நிஜ நாயகன் தான்.

அடுத்து அதாங்க தமிழ்நாட்டின் அர்னால்டு அருண் பாண்டியன் மற்றும் ராம்கி இனைந்து நடித்த இனைந்த கைகள்.நட்பிற்க்கு இந்த படமும் ஒரு எடுத்துக்காட்டு,ராணுவத்தில் இருக்கும் அருண் அசல் ராணுவ வீரன் போலவே என் கண்களுக்கு தெரிந்தார்

விக்ரம் இதுவும் நம்ம தல கமல் படம்தான்,அருமையான திரைக்கதை தழுவல், சலாமியா நாட்டில் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ராக்கெட்டை மீட்க செல்லும் கமல் ஆஹா,சலாமியா நாட்டின் இளவரசி சூப்பர் ஃபிகர்(பேரு தெரியலங்கோ ! தெரிஞ்சா சொல்லுங்க)

நான் கண் கலங்கிய ஒரே படம்,கண் பார்வை இல்லாத காசி யை ஏமாற்றும்
ஊர் பெரியவரும் அதை கடைசியில் தீர்த்த முடிவும் அருமை,விக்ரமின் நடிப்பு ஆஹா! ஓஹோ ரகம்

இந்த படத்தை சொல்லியே ஆகனும்,ஆயுத எழுத்து மூன்று கதாநாயகன்கள் இருந்தாலும் நம்ம ஆளு சூர்யா தான்,அருமையான மேனரிசத்தை வெளிப்படுத்தியிருப்பார்,மாணவ அரசியலும் அவர் ஸ்டைலும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல் தான்,பாடல்களில் ரஹ்மான் ரஹ்மான் தான்.


யாரடி நீ மோகினி தனுஷின் நடிப்பிற்க்கு ஒரு ஜில்தண்ணி அபிஷேகம்,நான் ரொம்ப என்ஜாய் செய்து பார்த்த படம்,இரண்டாவது பாதி காமெடி கிராமத்து கலாட்டா தான் சூப்பர் ரகம்.நயன் தாராவும் கவர்ச்சியை குறைத்து நடிப்பில் பட்டய கிளப்பி இருந்தார்.

எனக்குள் இன்னொரு உலகத்தை காட்டிய படம் நான் கடவுள்,ஆர்யாவுக்கும் அக்கா பூஜாவுக்கும் ஒரு "ஓ" போடுங்க,இப்படியும் நடக்கிறது இந்த உலகத்தில் என்று எனக்கு உணர்த்திய படம்,இளையராஜாவின் இசையில் நான் உருகியே விட்டேன்.

காதலை அருமையாக ரசித்த படம் வாரணம் ஆயிரம்,சூர்யா சார் செய்யுற காதல பார்த்தா நமக்கே காதலிக்கனும்னு தோணும்,அப்படிப்பட்ட ரொமான்ஸ் காதல்,"அடியே கொல்லுதே" பாடல் உட்பட அனைத்து பாடலும் சூப்பர் ஹிட்.

மன்னிச்சிகோங்க ! இத நான் முன்னாடியே சொல்லி இருக்கனும்
அன்பே சிவம் அடடா,இப்படியும் ஒரு நடிகனா என வியந்த படம்,முகத்திலே தளும்புகளுடன் உலக நாயகன் பதித்த ஒரு மைல் கல்,அன்புதான் அடிப்படை எனவுணர்த்திய படம்.

இன்னொரு வித்தியாசமான காதல் படம்,அதாங்க காதலில் விழுந்தேன்,இறந்து போன காதலியை தூக்கிக் கொண்டு ஓடும் போதும் சரி,நடிப்பும் சரி,சற்றே வித்தியாசமான படம்.

இந்த பத்து படமும் எனக்கு,எனக்கு மட்டும் பிடித்தவையே !

நன்றி ! நன்றி ! நன்றி !

12 Response to "பத்துப் படங்கள் (தொடர் பதிவு)"

 1. //சலாமியா நாட்டின் இளவரசி சூப்பர் ஃபிகர்(பேரு தெரியலங்கோ ! தெரிஞ்சா சொல்லுங்க)//

  "டிம்பிள் கபாடியா" ன்னு நினைக்கிறேன்.

  இதில் காதலில் விழுந்தேன் மட்டும் நான்
  இன்னும் பார்க்கவில்லை.
  நன்றி.

  சைவகொத்துப்பரோட்டா said.

  \\"டிம்பிள் கபாடியா" ன்னு நினைக்கிறேன்.\\

  ரைட்டு உங்களத்தான் தேடிக்கிட்டு இருந்தன்

  \\இதில் காதலில் விழுந்தேன் மட்டும் நான்
  இன்னும் பார்க்கவில்லை.\\

  பாருங்க நல்லா இருக்கும்

  நன்றி சை கொ ப

  Chitra says:

  very nice. :-)

  கொஞ்சம் வித்தியாசமான பத்து படங்கள தான் செலக்ட் பண்ணியிருக்கீங்க... இந்த பதிவின் என்னுடைய பதிப்பை படிக்க கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2010/04/10.html

  நன்றி
  சித்ரா அவர்களே

  philosophy prabhakaran said...

  \\கொஞ்சம் வித்தியாசமான பத்து படங்கள தான் செலக்ட் பண்ணியிருக்கீங்க...\\

  ஆமாம் தலைவா நான்
  சற்று வித்தியாசமானவன் தான்

  \\இந்த பதிவின் என்னுடைய பதிப்பை படிக்க கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2010/04/10.html\\

  சூப்பர் தல
  கற்றது தமிழ்-அருமையான படம் எனக்கும் பிடிக்கும்

  Ananthi says:

  உங்களுக்கு பிடித்த 10 படமும் நல்லா இருக்கு.. :)

  ஒன்பது படமும் ஒகே.. காதலில் விழுந்தேன்.. ;-)

  Ananthi said...

  \\உங்களுக்கு பிடித்த 10 படமும் நல்லா இருக்கு.. :)\\

  அப்படியா ஆனந்தி
  நன்றிகள் பல

  அதிஷா said...

  \\ஒன்பது படமும் ஒகே.. காதலில் விழுந்தேன்.. ;-)\\


  அது ஜில்தண்ணி ஸ்பெஷல் தல

  வருகைக்கு நன்றி அதிஷா அவர்களே

  Priya says:

  நல்ல தேர்வு. இதில் எனக்கு மிகவும் பிடித்தது காசிதான். மனதை பிசைந்த படம்!

  நன்றி ப்ரியா
  அடிக்கடி வாருங்கள்

Related Posts with Thumbnails