அறிவியல் வாத்தியாரிடம் சில கேள்விகள்
பில் கேட்சிடம் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை ,நேத்து தான் நம்ம பழைய அறிவியல் வாத்தியார பார்த்து பேசிகினு இருந்தேன்,அப்ப அவர் கிட்டேயும் சில கேள்விகள்,ஆனா என்ன பதில்கள் உடனே வந்துடுச்சு.
கடல் நீர் உப்பு கரிக்குதுன்னு நாம குடிக்க மாற்றோம்,அப்டி குடிச்சா என்ன ஆகும் வாத்தியாரே ?
டேய் தம்பி,ஒரு லிட்டர் கடல் நீரை எடுத்து சோதித்துப் பார்த்தால் கிட்டத்திட்ட 35 கிராம் உப்பு கிடைக்கும்,மனிதனுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் வரை தேவைபடுகிறது,இந்த அளவில் 100-150 கிராம் உப்பு இருக்கும் ,ஒரு நாளைக்கு இந்த அளவு உப்பு சேர்ந்தால் ஏகப்பட்ட விளைவுகள் ஏற்படும்..அப்பறம் ஒன்னும் செய்ய முடியாது ,சரியா
அய்யா நான் இந்த வயசுலேயே இம்புட்டு உசரமா இருக்கேன் நீங்க ஏன் குள்ளமாவே இருக்கீங்க?
ஆளுக்கு ஆள் உயரம் வித்யாசப்படுவது கால் எலும்புகளின் நீளம் தான்,குட்டையோ நெட்டையோ ஆண்களின் இடுப்பு முதல் கழுத்து வரை சராசரி 28 அங்குலம்தான் , பெண்களுக்கு 24 அங்குலம் , ஆளுக்கு ஆள் உயரம் வித்யாசமாவது இந்த கால் எலும்பு அளவில் தான்,ரைட்டா....
சரி இந்த உப்பு மேட்டர பத்தி சொல்லுங்க,மனிதனின் கண்ணீரும் ஏன் உப்பு கரிக்கிறது?
மனிதனின் கண்களிலிருந்து நாள்தோறும் குறைந்த பட்சம் 15 சொட்டு கண்ணீர் வருகிறது ,அது வாகனம் ஓட்டும் போதோ,தொலைகாட்சி பார்க்கும் போதோ எப்படி வேண்டுமானாலும் வரும்,அதில் பாதி ஆவியாகிவிடுகிறது,கண்ணீரில் 33% தண்ணீர் தான் இருக்கிறது,மேலும் அதில் புரோடீன்,குல்கோஸ் ,சோடியம் ,பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளதால் தான் உப்பாக உள்ளது.......
வாத்தியாரே எனக்குத்தான் கனவுல நமீதா,நயன்தாரா எல்லாம் வராங்க,கண் பார்வை இல்லாதவர்களுக்கு கனவு வருமா ?
கனவு பொதுவாக காட்சியுடன் தொடர்புடையது ,மூளையிலுள்ள பார்வைப்புரணி (visual cortex) என்ற பகுதியே பார்வை உணர்ச்சியை முறைப்படுத்துகிறது,நாம் உறங்கும்போதும் செல்கள் இயங்கிக் கொண்டிருக்கும்,அவற்றின் தன்னியல்பு இயக்கத்தால் தோன்றும் சாயல்கள் மற்றும் நிகழ்வுகளே கனவுகள் ஆகும்.
தூக்கத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது இடைவெளியிலோ தான் கனவு வருகிறது ,உறக்கத்தின் அந்த பகுதியை விரைவு விழியியக்க உறக்கம்(REM-Rapid Eye Movement sleep) என்பர் .
பார்வையற்றோருக்கு கனவு தோன்றுமா என்பது அவரது பார்வஐப்புரணி துடிப்புடன் செயல்படுகிறதா என்பதை பொறுத்தது ,பார்வைப்புரணி பழுதாகாத பார்வையற்றோரால் கண்டிப்பாக கனவு காண முடியும்,ஆனாலும் அவை வெறும் ஒளித் தெறிப்புகளாக மட்டுமே இருக்கும் (flash).
என் தம்பி பஸ்லயோ,கார்லயோ போனாலே வாந்தி எடுத்துடுறான் அது ஏன்?
உம் இதுக்கு பேரு மோஷன் சிக்னஸ், வாகனங்கள் முன்னும் பின்னும் அசைந்து குலுங்குவதால்,சிலரது உட்செவியிலுள்ள (inner ear ) உடல் சமநிலை நரம்புகள் மிகுதியாக தூண்டப்பட்டு குமட்டலும்,வாந்தியும் வருகிறது .பயணம் செய்து பழகிவிட்டால் இந்த பிரச்சன இருக்காது.
பஸ்ல போன ஒரு ரூபாய்க்கி புளிப்பு முட்டாய் வாங்கிக் கொடு,சரியாய் போயிடும்.
சரி இத்தன கேள்விக்கு பொறுமையா பதில் சொன்னேன்ல,நான் உன்ன ஒரு கேள்வி கேக்குறன் சொல்லு?
சரி கேளுங்க
உனக்கு எத்தன கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்க,உண்மையச் சொல்லு ?
அவ்வ்வ்வ் பப்ளிக்க வச்சி இதெல்லாம் கேக்க பிடாது , கேட்டாலும் 12 பிரண்ட்ஸ் தான்னு சொல்ல மாட்டேனே
டேய் மர மண்டயா அதான் நீ யே சொல்லிட்டியே
ஆஹா! சரி சரி விடுங்க ஒரு இளைஞன் வாழ்கையில இதல்லாம் சகஜமப்பா...
சரி டா ,மணி ஆயிடிச்சி,வீட்டுக்காரி திட்டுவா வரட்டுமா,மீண்டும் சிந்திப்போம்
நீங்களுமா,சரி வாத்தியாரே வாங்க !!!
தினமும் படிக்கிறவங்க லிஸ்டில் அடியேன் பெயரையும் இணைத்ததற்கு நன்றி... ஆனா பதிவு எங்கே... தலைப்பு மட்டும் தான் இருக்கு...
மிகவும் சிறப்பு நண்பரே . அறிவியல் கேள்விகள் என்ற உங்களின் பதிவின் வாயிலாக இதுவரை அறியாத பல தகவல்கள் அறிந்துகொன்டன் .
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு !
பகிர்வுக்கு நன்றி !
நல்ல தகவல்கள்
தகவல்கள் அருமை.. தண்ணில ஒரே உப்பா இருக்கு இன்னிக்கி :)
//கேட்டாலும் 12 பிரண்ட்ஸ் தான்னு//
ஓ அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீங்க ;)
//ஒரு இளைஞன் வாழ்கையில/
நீங்களும் யூத்தா.. அப்படியே நெஜப்பேர் மற்ற விவரங்கள் எல்லாம் வெளியிட வேண்டிதானே..
//அவை வெறும் ஒளித் தெறிப்புகளாக மட்டுமே இருக்கும் (flash)//
இத கேக்கறதுக்கே கஷ்டமா இருக்கு
உப்பில் கூட இவ்வளவு தகவல்கள் உண்டா?
உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி !
விருதுக்கு வாழ்த்துக்கள்
சில தெரியாத விசயங்களை தெரிந்து கொண்டேன்... பகிவிற்கு நன்றி..
ஆஹா.. உங்களுக்கு 12 கேர்ள் பிரண்ட்ஸா..
பெரிய ஆளு தான் போங்க..
நல்லா இருக்கு..
பார்வையில்லாதவங்களுக்கு வார்த்தைகளாக கனவு வரும்!
நான் அவர்களிடமே கேட்டிருக்கேன்!
//பஸ்ல போன ஒரு ரூபாய்க்கி புளிப்பு முட்டாய் வாங்கிக் கொடு,சரியாய் போயிடும்.//
புளிப்பு மிட்டாய் சாப்பிட்டால் தலை சமநிலைபடுமா!?
எப்படி அது?
Good quistions & Answers...
நல்ல தகவல் வாத்யாரே !!!
@philosophy prabhakaran
நன்றியெல்லாம் நமக்குள் எதற்கு பிலாசபி நண்பா!
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பனித்துளி சங்கர் சார் :)
@VELU.G
வாங்க வேலு சார்! ரொம்ப நன்றி
@பிரசன்னா said...
//ஓ அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீங்க ;)//
வெறும் 12 பிரண்ட்ஸ் தானே இருக்கு
//நீங்களும் யூத்தா.. அப்படியே நெஜப்பேர் மற்ற விவரங்கள் எல்லாம் வெளியிட வேண்டிதானே..//
அதுக்கு என்ன அவசரம்
இந்த பெயரில் இருப்பதுதான் எனக்கு த்ரில்லா இருக்கு,கொஞ்ச நாள் போகட்டும் சொல்லிடுவோம்
//இத கேக்கறதுக்கே கஷ்டமா இருக்கு//
ம்ம்ம் எனக்கும், எழுதும் போது சற்று சிந்தித்தேன் அவர்களை பற்றி
@கிறுக்கல்கள்
வாங்க கிறுக்கல் ! மிக்க நன்றி
பின் தொடர்ந்ததற்க்கு
@r.v.saravanan
வாங்க குடந்தை மனிதரே!
தங்களுக்கும் வாழ்த்துக்கள்
@நாடோடி
நன்றி நாடோடி சார்:)
@Ananthi said...
//ஆஹா.. உங்களுக்கு 12 கேர்ள் பிரண்ட்ஸா..
பெரிய ஆளு தான் போங்க..//
நாங்க அப்டி ஒன்னும் சாதிக்கலயே,கேர்ள் பிரண்ட்ஸ் இருந்தா பெரிய ஆளா என்ன ?
(சும்மா ஹீ ஹீ ஹீ)
@வால்பையன் said...
//புளிப்பு மிட்டாய் சாப்பிட்டால் தலை சமநிலைபடுமா!?//
புளிப்பு மிட்டாய் சாப்பிட்டால் குமட்டல் வராமல் இருக்கும்,அதத்தான் சொன்னேன்
நன்றி வால் :)))
@Riyas
வாங்க ரியாஸ் ,மிக்க நன்றி :))
@ஜெய்லானி said...
//நல்ல தகவல் வாத்யாரே !!!//
நன்றி ஜெய்லானி,ஹா ஹா ஹா அதுக்குள்ள வாத்தியார் ஆக்கிட்டீங்களே :)
வாழ்த்துக்கள்
சில தெரியாத தகவல்களை தெரிந்துக்கொண்டேன்.. நன்றி!
அருமையான தகவல்கள்.
நல்லாயிருக்கு சொன்ன விதம்... அடிச்சு ஆடுங்க!
###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
:) மிகவும் நன்றாக இருந்தது. பயனுள்ள விசயங்கள்.
அருமையான பதிவு
see it here Dior Dolabuy Check This Out Ysl replica bags resource Prada Dolabuy