உலகின் ஏழாவது பணக்காரர்

உலகின் சிறந்த கார்ப்பரேட் நிருவனத்தின் தலைவர்,சிறந்த நிர்வாகி,உலக பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் என்றெல்லாம் இவரை புகழ முடியாது,ஏனென்றால் இவர் உலக போதை உலகின் முடிசூடா மன்னனாவார்,அவர் தான் "பாப்லோ எஸ்கோபர்"


உலக வரைபடத்தில் அழகான கோன் ஐஸ் மாதிரி வட அமெரிக்காவுக்கு கீழே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி தேசம் தான் கொலம்பியா.

போதை கடத்தல்காரர்களின் தலைமையகம் கொலம்பியா என்றால்,அதன் குல தெய்வம் இந்த எஸ்கோபர்.கொலம்பியா அசாதாரண கனிம வளங்களை கொண்ட நாடாகும்,சுதந்திரத்திற்க்கு பிறகு எல்லா லத்தீன் அமெரிக்க நாடுகளை போலவே பல உள்நாட்டுக் குழப்பங்கள் வந்தது,எல்லை தகராறு,சிவில் யுத்தம் போன்றவற்றால் பொருளாதாரம் சின்னாபின்னமானது.

அமெரிக்க அன்னாச்சி உள்ளே வந்தார்,பல கொரில்லா இயக்கங்களுக்கு பண உதவியும்,பயிற்சியும் அளித்து கலவரத்தை உருவாக்கியது,ஏழை விவசாயிகள் நிலத்தை வைத்துக் கொண்டு சும்மா இருந்தனர்.

அந்த நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து போட்டு,பயிரிட்டதுதான் கொக்கோ என்ற செடி,இந்த செடியிலிருந்துதான் கொக்கெய்ன் உருவாக்கப்படுகிறது.


பச்சை கொக்கோ இலைகளை கொதிக்கவைத்து,வடிகட்டி,ஆறவைத்து,மீண்டும் வடிகட்டி,பொடியாக்கி,ம்ம்ம் இந்த மாதிரி அற்புதமாக கொக்கெய்ன் உருவாக்கும் வல்லுனர்கள் பலர் எஸ்கோபர் கையில் இருந்தனர்.

எஸ்கோபர் என்ற போதை ராஜா இங்கு தான் முளைத்தான்,இந்த கொக்கெய்ன் வேறு எங்கும் பயிரிடுவதில்லை,பயிரிட்டாலும் அதை சிறந்த தரத்திற்க்கு போதை மருந்து தயாரிக்க ஆட்கள் வேறு எங்குமில்லை என்பதை புரிந்து கொண்டான் எஸ்கோபர்.

கொக்கெய்ன் வியாபாரத்தை உலக அளவில் கொண்டு செல்ல முடிவு செய்தான்,சரி இது என்ன கடலை மிட்டாய் பிசினசா,போதை பொருட்களாச்சே எப்படி அரசாங்கம் சும்மா இருக்கும்

அதற்கு எஸ்கோபர் சொன்ன வார்த்தைகள்

"பணத்தை கொடுத்து இந்த அரசாங்கத்தை விலைக்கு வாங்கிவிடுவேன்,முரண்டு பிடிப்பவர்களை கொன்று நதியில் வீசிவிடுவேன்"

கொக்கெய்ன் வியாபாரம் கோடி கோடியாக கொழித்தது,பணப் புழக்கம் எக்கச்சக்கம்,அந்த நேரத்தில் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி வைத்திருந்தான் எஸ்கோபர்,ஆம் உலகின் ஏழாவது பணக்காரனானான் இந்த போதை மேதை.

அமெரிக்காவே பாதி அடிமையாக்கிவிட்டது இந்த கொக்கெய்னுக்கு அந்த அளவுக்கு போதை..........அப்படி ஒரு போதை.......


எப்படி அரசாங்கத்தையும்,அமெரிக்காவையும் சமாளித்தான்,அவனுக்கு பிரச்னையே வரவில்லையா.....அடுத்த பதிவில் பார்ப்போம்

15 Response to "உலகின் ஏழாவது பணக்காரர்"

  1. Anonymous says:

    முதல் ஆளாக வந்துவிட்டேன்..
    வித்தயாசமான தகவல்..
    எஸ்கோபர் சொன்ன வார்த்தைகள் தலைகணத்தின் உச்சம்..

    //பச்சை கொக்கோ இலைகளை கொதிக்கவைத்து,வடிகட்டி,ஆறவைத்து,மீண்டும் வடிகட்டி,பொடியாக்கி,ம்ம்ம்//

    ஏன் ?!! ,அதை முழுசா எழுதினா குறஞ்சா போய்டுவீங்க !! ச்சே என்ன ஆளுய்யா நீ....

    :-)))))))

    பணக்காரர்கள் பலரகம். அதில் இவர் ஒரு ரகம் போலிருக்கிறது.

    hmmmm... romba pudhusa pudhusa elutha aarambichiteenga.. poruththamaana padangal.. :)
    vazhthukkal..

    Enakkum friendship viruthu koduththatharku romba romba nanri :)

    இந்த ஆளுக்கு முதலில் டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் . அடுத்த பதிவில் என்னதான் நடக்குததுனு பாக்க நாங்களும் வருவோம்ல . நாங்கெல்லாம் யாரு பாம்புக்கே பல்லு வேளக்கி விடுவோம்ல !


    ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

    விகடன்ல படிச்சதா ஞாபகம்...

    Romeoboy says:

    நல்ல இருக்கு. எழுத்துப்பிழை ஆங் ஆங்கே எட்டி பார்க்கிறது கொஞ்சம் கவனமுடன் பதிவேற்றம் செய்யவும்

    அறியாத‌ த‌க‌வ‌ல்க‌ள்....ம்ம்ம்..தொட‌ருங்க‌ள்..

    அறியாத தகவல்கள் நண்பரே...

    Prasanna says:

    தமிழ்பட வில்லனா நடிக்க (ஹீரோயின் அப்பா) இவருக்கு தகுதி இருக்கு :)

    @இந்திராவின் கிறுக்கல்கள்

    வாங்க இந்திரா மேடம்,மிக்க நன்றி

    @ஜெய்லானி said...

    //ஏன் ?!! ,அதை முழுசா எழுதினா குறஞ்சா போய்டுவீங்க !! ச்சே என்ன ஆளுய்யா நீ....//

    ஆஹா,அதற்கு ஒரு முழு பதிவே வேணும்,அதையும் ஒரு பதிவா போடுறேன்

    @சேட்டைக்காரன்

    நன்றி சேட்டை

    @Ananthi said...

    //hmmmm... romba pudhusa pudhusa elutha aarambichiteenga..//

    ஏதோ என்னால முடிஞ்சது
    நன்றி ஆனந்தி

    @பனித்துளி சங்கர்

    நன்றி தல !

    @ILA(@)இளா
    மிக்க நன்றி இளா

    @~~Romeo~~

    நன்றி ரோமியோ,திருத்திக் கொள்கிறேன்

    @நாடோடி

    மிக்க நன்றி நாடோடிகள் சார்

    @அகல்விளக்கு

    வாங்க அகல்விளக்கு,மிக்க நன்றி

    @பிரசன்னா said...

    //தமிழ்பட வில்லனா நடிக்க (ஹீரோயின் அப்பா) இவருக்கு தகுதி இருக்கு :)//


    ஹீ ஹீ ஹீ பிரசன்னா
    அடுத்த பதிவை தொடர்ந்து படியும்
    அப்ப தெரியும் இவர் வில்லனா,ஹீரோவா

    அறியாத தகவல்கள் தொட‌ருங்க‌ள் நண்பரே

    Anonymous says:

    இது கிழக்கு வெளியிட்ட என் பெயர் எஸ்கோபரில் இருந்து சுட்ட பதிவு.இதெல்லாம் ஒரு பொழப்பு.

Related Posts with Thumbnails