டிக்கெட்
காலை 8.30 மணி - பேருந்து நிலையம்
காலேஜ் வழியா செல்லும் நகரப் பேருந்து வருதான்னு எட்டி பார்த்த பிரபாவுக்கு அவன் ஃபிகர் அங்கு நின்று கொண்டிருந்ததை பார்த்த போது ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்
என்னடா எப்போதும் காலேஜ் பஸ்லயே போயிடுவா,இன்னக்கி இங்க நிக்கிறா,சரி நமக்கடித்த அதிர்ஷ்டம் என்று தன்னுள் சொல்லிக் கொண்டு சிரித்தான் அவன்
பேருந்தும் வந்தது அவள் அசால்ட்டாக முன் புறம் ஏறி நின்று கொண்டாள், நண்பர்கள் டேய் அடுத்த பேருந்தில் போகலாம் டா என்று கத்தியும் காதில் விழாதது போல் அவனோ பின் புறமாக முட்டி மோதி அவளுக்கருகில் போய் நின்றான்
முழு நிலவைப் போல் பிரகாசித்திருந்தது அவன் முகம்,அவள் சிரிப்புச் சில்லரைகளை சிதற விட இவன் ஒவ்வொன்றாய் பொறுக்கிக் கொண்டிருந்தான்
இவ்வளவு நெருக்கத்தில் பிரபா இதுவரை அவளை பார்த்ததில்லை,கிறக்கத்தில் அங்கு நடந்தது யாவும் ஊமைப் படமாகவே தெரிந்தது அவனுக்கு
அங்கு எவனோ இந்த பாடலை வேறு ஓடவிட்டிருந்தார்கள்
காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை
தீயின் குடுவையில் அடைத்தால் கண்ணை
திடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈரென்று சடன் பிரேஏஏஏஏஏஏஏஏஏஏஏக்
போட்டு ஓரங்கட்டினார் டிரைவர்
காரணம் டிக்கட் செக்கிங் செய்கிறார்களாம்
வெள்ளை சீருடை அணிந்த இருவர் இரு பக்கமும் நின்று கொண்டு ஒவ்வொருத்தராக செக் செய்தனர்
அப்போது தான் பிரபாவுக்கு தோணியது ஆஹா நாம டிக்கட் எடுத்தோமா தெரியலயேன்னு சட்டை பையை துழாவியதில் கிடைத்தது சில சில்லரை காசுகள் மட்டுமே
ஒவ்வொருவராக டிக்கெட்டை காட்டிக் கொண்டிருந்தனர்
பிரபாவுக்கு இப்போது முற்றிலும் வியர்த்து விட்டது
ஆஹா டிக்கெட் எடுக்கலன்னா இவனுக எப்புடியும் ஒரு 150 ரூவாயாவது தாளிச்சிருவானுங்க,ரூல்சு பேசினா ஃபைன் 500 கட்றியான்னு கேப்பாங்க
அவனுக்கு என்ன செய்வது என்று புரியல,இப்ப பையில் இருப்பது எல்லாத்தையும் தேத்துணா கூட முழுசா முப்பது ரூவா கூட தேறாது,பயலுவோ கூட வந்தாலாச்சும் அவனுகளாவது எதாவது வழி செய்திருப்பானுங்க என்று பல கோணங்களில் இருந்தும் யோசனை வந்தது
இந்த பொண்ண பாத்து வாய பிளந்து பேருந்தில் ஏறினது என் தப்பு என்று தலையிலடித்துக் கொண்டான்
அதற்குள் அந்த டிக்கெட் செக்கிங் ஆசாமி அவனை பார்த்து டிக்கெட் எங்கப்பா எடுத்து குடுத்துட்டு போப்பா,காலேஜுக்கு மணி ஆகலயா இன்னும் ?
அவன் என்னுமோ பத்து இட்லியை வாயில் வைத்திருப்பதை போல் "டிக் டிக் டிக்கெட்" என்று மழுப்பி விட்டான்
அதற்குள் அந்த ஆசாமி " ஓ உங்கிட்ட இருக்குறது பஸ் பாசா,சரி அத காட்டு"
அப்போது தான் பிரபாவுக்கு 300 வாட் பல்பு எறிந்து நினைவுக்கு வந்தது,ஆமாம் நம்மகிட்டதான் பஸ் பாசு இருக்குள்ள,அப்பரம் என்ன பயம்...
பிரபா தலையில் அடித்துக் கொண்டு சிரித்தான் " சே அந்த பொண்ண பாத்ததும் இது கூடவா மறந்து போகும் மரமண்டையாட நீ "
டிஸ்கி : இது உனக்கு நடந்த உண்மை கதையான்னு யாராவது கேட்டீங்க,அப்பரம் ஆமான்னு சொல்லிடுவேன் ஆமாம் :)
எனக்கு தான் வடையா ....
தம்பி என்ன இது ???
தம்பி உண்மைய சொல்லு..
படிப்பு எல்லம் எப்படி போகுது, பதிவ பாத்தா அது என்னவோ வேற ரூட்ல போறா மாதிரில்ல தெரியுது !!
இது அடி வாங்கினதுக்கு பின்ன சொன்னியா. அதுக்கு முன்னாடியே சொல்லிட்டியா?
@வினோ
வட இல்ல போண்டா உங்களுக்குதான்
@குத்தாலத்தான்
அதான் போட்ருக்கோம்ல மொக்கை கதைன்னு :)
@@வினோ said...
/// தம்பி உண்மைய சொல்லு..///
இந்த கதை நாயகன் வேற யாருமில்ல நம்ம குத்தாலத்தான் பிரபா தான் :)
@@@ருத்ர வீணை® said...
///படிப்பு எல்லம் எப்படி போகுது, பதிவ பாத்தா அது என்னவோ வேற ரூட்ல போறா மாதிரில்ல தெரியுது !!//
படிப்பெல்லாம் பக்காவாத்தான் போவுது,ஒரு உண்மைய சொல்லனும்னா இந்த மொக்கைய எழுதி ரெண்டு மாசமாகுது இப்ப் போஸ்ட் பன்றேன் :)
ஹீ ஹீ
poiyaaa apdikaaaa!!!
@@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இது அடி வாங்கினதுக்கு பின்ன சொன்னியா. அதுக்கு முன்னாடியே சொல்லிட்டியா?///
முன்னாடியே சொல்லிட்டேன் நல்ல வேலை (சத்தியமா உண்மை தான்)
அப்பரம் நம்ம சென்னைல இது மாதிரி செக்கிங் வந்து மாட்டுனா சிரிப்பு போலீசு பேர சொல்லி தப்பிச்சிக்கலாம் :)
ஹாஹாஹா உண்மைக் கதைதான் கண்டு பிடிச்சிட்டேன்..:))
@@@தேனம்மை லெக்ஷ்மணன் said...
/// ஹாஹாஹா உண்மைக் கதைதான் கண்டு பிடிச்சிட்டேன்..:)) ///
வாங்க வாங்க :)
உண்மைய வெளியே சொல்லப் பிடாது :)
இது உனக்கு நடந்த உண்மை கதையான்னு யாராவது கேட்டீங்க,அப்பரம் ஆமான்னு சொல்லிடுவேன் ஆமாம் :)////
சரி சரி உனக்கு நடந்த கதையானு கேக்க மாட்டேன்
//முழு நிலவைப் போல் பிரகாசித்திருந்தது அவன் முகம்,அவள் சிரிப்புச் சில்லரைகளை சிதற விட இவன் ஒவ்வொன்றாய் பொறுக்கிக் கொண்டிருந்தான்//
//சட்டை பையை துழாவியதில் கிடைத்தது சில சில்லரை காசுகள் மட்டுமே//
அந்த சில்லறை தானே இந்த சில்லறை! அந்த பெண் கொஞ்சமாத்தான் சிரிச்சிச்சோ! :-)
அடடா கடைசியில தப்பிசிட்டாங்களே....
just missu
pikar photo podalaya??
//" சே அந்த பொண்ண பாத்ததும் இது கூடவா மறந்து போகும் மரமண்டையாட நீ "//
:) :) :)
nice... all the best..
//முழு நிலவைப் போல் பிரகாசித்திருந்தது அவன் முகம்,அவள் சிரிப்புச் சில்லரைகளை சிதற விட இவன் ஒவ்வொன்றாய் பொறுக்கிக் கொண்டிருந்தான்//
அட அட அட... என்னாமா ஜிந்திக்கிற ஜில்லு...
//இது உனக்கு நடந்த உண்மை கதையான்னு யாராவது கேட்டீங்க,அப்பரம் ஆமான்னு சொல்லிடுவேன் ஆமாம்//
அது தான் எங்களுக்குத் தெரியும்ல..
///பிரபா தலையில் அடித்துக் கொண்டு சிரித்தான் " சே அந்த பொண்ண பாத்ததும் இது கூடவா மறந்து போகும் மரமண்டையாட நீ "//
செம கதை மாப்பு .. சத்தியமா கலக்கல் ..!!
ullen sir...
kalakkal..
இந்த கதை மூலம் சொல்ல வரும் கருத்து??
( ச்சும்மா கேட்டு வச்சேன்)
///காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை
தீயின் குடுவையில் அடைத்தால் கண்ணை
////////
அருமையான பதிவு நண்பரே அதிலும் நீங்கள் மேற்கோள் காட்டி இருக்கும் இந்த பாடல் வரிகளை வாசிக்கும் பொழுதும் , கேட்கும் பொழுதும் சில நேரங்களில் தனக்குத்தானே சிறையிட்டுக்கொள்ளத் துடிக்கிறது மனம் . பகிர்வுக்கு நன்றி