மன்னாதி மன்னன் - ஹர்சவர்த்தனர்

வரலாற்றை படிப்பதனால் அப்படி என்ன தெரிந்து விடப் போகிறது,எல்லாம் முடிந்து போன விஷயம் தானே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்,இந்த பதிவை எழுத நிறைய மன்னர்களை பற்றி புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்தேன்,அதில் இந்த மன்னனை மட்டும் தெரிந்து கொள்ளவில்லை,அந்த காலத்தில் இருந்த சமயங்கள்,பண்பாடுகள் பற்றி அறிய இந்த பதிவு எனக்கு உதவியது

இந்த அருமையான பதிவை என்னை எழுத வைத்த,தொடர் பதிவிற்கு அழைத்த நண்பன் ரசிகன்:மகேஷ் க்கு நன்றிகள் பல


ரசிகன் : மகேஷ் அவர்களின் மன்னாதி மன்னன் - சந்திரகுப்த மௌரியர் பதிவு
_____________________________________________________________________________

கி.பி ஏழாம் நூற்றாண்டில் அரசியல் மேடை ஏறியவரும் கடைகி மிகப்பெரும் புத்த மத மன்னருமான ஹர்சவர்த்தனர் வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னராவார்.

முடிசூட்டல்

கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நரவர்த்தனர் என்பவரால் இந்த வம்சம் நிறுவப்பட்டது, அவரை தொடர்ந்து ஆதித்யவர்த்தனரும்,பிரபாகவர்த்தனரும் ஆட்சி செய்தனர்,பிரபாகவர்த்தனரின் மறைவுக்கு பின்னர் இராஜ்ய வர்த்தனர் அரியனை ஏறினார்

ஹீனர்களை (ஊனர்கள்) அடக்கி தானேசுவரத்தை கைபற்றினார்,அதே சமயம் மாளவ மன்னன் தேவகுப்தன் ஹர்சரின் சகோதரி ராஜ்ஸ்ரீயின் கணவரை கொன்றுவிட்டு ராஜ்யஸ்ரீயையும் தன்னோடு அழைத்துச் சென்று சிறை வைத்தான்

அதை அறிந்த ராஜ்யவர்த்தனர் தேவகுப்தன் மீது போர் தொடுத்து வெற்றியும் பெற்றான்,ஆனால் அதன் பின் சில சூழ்ச்சியால் சசாங்க மன்னனால் கொல்லப்பட்டான்

அப்போது ஹர்சருக்கு வயது பதினாரே நிரம்பிய நிலையில் ஹர்சவர்த்தனராக முடிசூட்டிக் கொண்டார்,ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சசாங்கனை பழிவாங்கி தன் சகோதரி ராஜ்யஸ்ரீயையும் மீட்டான்


ஆட்சி முறை

அதுவரை தானேசுவரத்தை தலைநகராக கொண்டு தான் அனைவரும் ஆட்சி செய்து வந்தனர்,ஆனால் ஹர்சர் கன்னோசியையும் அதனுடன் இனைத்து மாபெறும் சாம்ராச்சியத்தை உருவாக்களானான்.


மிகப்பெரிய பேரரசு பரந்து விரிந்திருந்ததனால்,ஆட்சி செய்ய கடினமாய் இருந்தது,அதனால் சிற்றரசர்களை அச்சுருத்தவும்,உள்நாட்டுக் குழப்பங்களை தீர்க்கவும் ஒரு மிகப் பெரிய படையை 60,000 யானைகளையும், 1,00,000 குதிரைகளையும் வாங்கி உருவாக்கலானான் என்று குறிப்புகளில் உள்ளது

படைபலம் மட்டுமன்றி  நட்பையும் பெருக்கலானார்,அசாம் நாட்டு மன்னன் பாஸ்கர வர்மனிடம் தீவிர நட்பு பாராட்டலானார்.

அது மட்டுமன்றி அண்டை தேசங்களுடன் நட்பு பாராட்டி வானிபத்தை பெருக்க முயன்றார்,அதற்கு சீன தேசத்திற்கு தன் தூதுவரை அனுப்பி நட்பு பாராட்டினார் ஹர்சர்

மாநிலங்கள் புக்திகள் என்று அழைக்கப்பட்டன,புக்திகள் விஷயம் அல்லது மாவட்டங்களாக பிரித்து நிர்வாகம் செய்தான்

ஹர்சரின் சமயம்

தொடக்கத்தில் தீவிர சிவபக்தராக இருந்தவர் ஹர்சர் என்றும்,யுவான் சுவாங் தெரிவித்த புத்த மத கொள்கைகளாலும்,சகோதரி ராஜ்யஸ்ரீ யாலும் இவர் புத்த மதத்தை தழுவலானார்

புத்த சமயத்தை இவர் தழுவினாரே அன்றி ஏனைய சமய மக்களையும் கனிவோடு கவனித்தார்,கட்டாய மதமாற்றம் போன்றவைகளை வெறுத்தார்

தலைநகர் கன்னோசி

வடஇந்தியாவின் முக்கிய நகரமாகி புத்தர் காலத்து பாடலிபுத்திரத்தின் இடத்தை பிடித்தது ஹர்சரின் தலைநகர் கன்னோசி, 10,000 க்கும்  மேற்பட்ட இரு புத்த சமய துறவிகள் இங்கு வாழ்ந்து வந்தனர்

பிற மத கோவில்களும் இருநூற்றுக்கும் மேல் இருந்ததாகவும் தெரிகிறது, நன்கு  திட்டமிடப்பட்ட வீதிகளும்,பூங்காக்களும்,புத்த மடங்களும் கன்னோசியை அலங்கரித்தது

யுவான் சுவாங்கும் நாலந்தா பல்கலைகழகமும்

ஹர்சர் சீனாவடன்   நெருங்கிய நட்பு பூண்டமையால்,சீன நாட்டு யுவான் சுவாங்கை வரவேற்று உபசரித்தார்,யுவானுக்கு ஹர்சரின் ஆட்சி முறையும் போர் திறமையும் மிகவும் பிடித்து விட்டது



ஹர்சரின் காலத்தில் மிகப்பெரும் தொகை மானியமாக நாலந்தா பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்தது

பல்கலையின் உயர்ந்த கட்டிடங்கள்,போதனா முறைகள் ஆகியன புத்த சமயத்திற்கே உரித்தான புகழாகும்

ஹர்சர் காலத்து இலக்கியம்

ஹர்ச சரிதத்தையும் காதம்பரி போன்ற அற்புத நூல்களை படைத்த பாணபட்டர் ஹர்சரின் நெருங்கிய நண்பர் ஆதலால் இவரின் இலக்கிய ஆர்வம் இதிலிருந்தே தெரிகிறது

மேலும் ஹர்சரே ஒரு சிறந்த நாடகாசிறியர் ஆவார்,நாகானந்தம்,பிரியதர்ஷிகா,இரத்தினாவலி ஆகியன இவரே எழுதிய நாடகங்கள்

மறைவும் பேரரசின் சிதைவும்

நாற்பாதாண்டு காலம் மிகப் பெரிய சாம்ராச்சியத்தை நடத்திய ஹர்சவர்த்தனர் கி.பி 647 வாக்கில் மறைந்தார் என தெரிகிறது

ஹார்சரின் மறைவுக்கு பிறகு அவருக்கு கீழிருந்த சிற்றரசர்கள் தங்கள் எல்லைகளை பெருக்கி கொண்டனர்,அசாம் மன்னன் பாஸ்கர வர்மனும் நகரங்களை பிடித்துக் கொண்டான்,இதனால் மிகப்பெரிய சாம்ராச்சியம் முடிவுக்கு வந்தது

குறிப்புகள் :

ஹர்சரை பற்றிய குறிப்புகள் பாணரின் ஹர்சசரிதத்திலும்,யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளான சியூக்கியிலும் கிடைக்கப் பெற்றவை

விக்கிபீடியா கலைக்கலஞ்சியத்தில் இவரை பற்றி ஆங்கிலத்தில் அதிக தகவல்கள் உள்ளன,தமிழில் மிகக் குறைவே

தொடர் பதிவு :
 
விக்கிபீடியாவில் இவர் போன்ற மன்னர்களை பற்றிய தகவல்கள் தமிழில் மிகக் குறைவாகவே உள்ளது,விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகளை அதிகம் வலையேற்றும் சிறு முயற்சியாக இந்தப் பதிவைத் தொடர்பதிவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஆகவே, விருப்பமிருக்கும் அனைவரும் "மன்னாதி மன்னன்" என்றத் தலைப்பில் தொடரலாம். பின்வரும் விதிகளை மட்டும் கவனத்தில் கொள்க!

1) வரலாற்றில் முக்கியமான எந்த மன்னரைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்,ராணிகளையும் இதில் எழுதலாம்

2) விக்கியில் தமிழில் அதிகம் தகவல் இல்லாத மன்னராக இருக்க வேண்டும்.

3) கட்டுரையை முடித்ததும் விக்கியில் வலையேற்றவும்.
 
இதை தொடர அழைக்கிறேன்

இவர்கள் மட்டுமல்ல ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தொடரலாம் !!! மன்னாதி மன்னனை



29 Response to "மன்னாதி மன்னன் - ஹர்சவர்த்தனர்"

  1. நண்பா அருமையான பதிவு..

    தெரியாத பல தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

    பகிர்வுக்கு நன்றி..

    தொடர்பதிவுன்னு எப்படியோ மாட்டி விட்டாச்சு ...
    உனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்குமே..

    தெரியாத தகவல்கள் இப்படி மன்னர்கள் பற்றி பதிவு போடுவது நல்லது...நான் பதிவு போடனும் என்ன ஓரு வில்லத்தனம்...

    மிகவும் நல்ல பதிவு... நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் உங்கள் உழைப்பை கட்டுகிறது... நல்லவங்களா நான் அடிக்கறது இல்ல. I mean நல்ல பதிவுகளை நான் நக்கல் அடிக்கறது இல்ல...

    (மனசுமாறி நக்கல் அடிச்சா கம்பெனி நிர்வாகம் பொறுப்பு அல்ல.)

    dheva says:

    அட்டகாசமான ஆரோக்கியமான ஒரு பதிவுத்தொடர் தம்பி....! சரியான பாதையில் பதிவுலகம் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது....என்று நினைக்கிறேன்...! இப்படி தொடர்பதிவுகளின் மூலம் வரலாறூ, அறிவியல், மற்றும் சமூகம் என்று ஒரு பெரும் புரட்சியே நடக்கவேண்டும்...!

    மகிழ்ச்சி கலந்த பாரட்டுக்கள் தம்பி!

    Unknown says:

    வரலாற்று பதிவு நன்றாக வந்திருக்கிறது... தொடருங்கள்... பின் தொடர்கிறோம்...

    கலக்கல்

    வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.

    Rajan says:

    பயபுள்ல ரொம்ம்ப்ப கெட்டு போச்சு!

    Jey says:

    ஜில்லு , நல்ல முயற்சிப்பா. வாழ்த்துக்கள்.

    நடக்கட்டும் , நடக்கட்டும்

    good one

    தமிழ் விக்கியில் இல்லாத மன்னர்கள் யார் என்ற தகவல் உள்ளதா? உங்களுக்கு தெரிந்ததால் சொல்லவும்..எழுதிடலாம்..

    @அமுதா கிருஷ்ணா

    //தமிழ் விக்கியில் இல்லாத மன்னர்கள் யார் என்ற தகவல் உள்ளதா? உங்களுக்கு தெரிந்ததால் சொல்லவும்..எழுதிடலா //

    ரொம்ப நன்றிங்க :)

    விக்கியில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரை பற்றி தகவல்கள் இருப்பதாக தெரியல

    அதியமான் நெடுமானை பற்றியும் ரொம்ப குறைவான தகவல்கள் உள்ளன

    இதை எழுத முயற்சிக்கலாமுங்க

    வேறு மன்னர்கள் தெரிந்தால் சொல்றேன்

    //தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரை பற்றி தகவல்கள் இருப்பதாக தெரியல//

    தகவல் வேணுமுங்களா?

    // தகவல் வேணுமுங்களா? //

    கொடுங்க கொடுங்க :)

    இதன் தொடர் பதிவா நீங்களே சரபோஜியை போடுங்களேன் தல

    Chitra says:

    ஆஹா... உங்களுக்குள் தூங்கி கொண்டு இருந்த பெரிய கற்பனை மிருகத்தை தட்டி எழுப்பி விட்டுட்டாங்க.... super!

    நீங்கதான் நம்ம கடைப் பக்கம் எட்டிக் கூட பாக்க மாட்டேன்ட்ரீங்களே?

    சரபோஜி, அந்நிய மன்னனா இருந்தாலும், அவரின் நீதி பரிபாலனம் அருமையானது.

    ஜில்லு அருமையான பதிவு..
    நண்பர் வெறும்பய என்ன பண்ண போறாரு பார்ப்போம்...

    Thank you so much Jillu...

    Nalla vanthiruku.

    Wiki la upload pannalya ?

    KUTTI says:

    VERY NICE POST YOGESH..

    KEEP IT UP..


    MANO

    @கொல்லான்

    //நீங்கதான் நம்ம கடைப் பக்கம் எட்டிக் கூட பாக்க மாட்டேன்ட்ரீங்களே? //

    உங்க கடைய பத்தி இதுவரை தெரியாம போச்சு தல,இப்ப வந்துட்டேன்

    அப்ப நீங்க சரபோஜிய பத்தி கண்டிப்பா எழிதியே ஆகனும் தல

    என்ன சொல்றீங்க ??

    கலக்கிட்டப்பா, வரலாற்றை திருப்பி பார்க்கிற ஒரு அற்புதமான பதிவு..நிறையா அலசி இருக்கிறீர்கள்,,அவசியமான
    இடுக்கை, நல்ல கோர்வையாய் எழுதி இருக்கிறீர்..

    வாழ்த்துக்கள் தம்பி

    பதிவு அருமை மாப்பி ...!
    நிச்சயம் தொடருவோம் .. மன்னர்களைப்பற்றித்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் ..!!

    ஜில்தண்ணி அவர்களுக்கு தங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமை. வரலாற்றை பற்றி அறிவது மிக முக்கியம்.

    நானும் இந்த தொடரில் இணைய ஆசைப்படுகிறேன்.

    ///நானும் இந்த தொடரில் இணைய ஆசைப்படுகிறேன். ///

    ரொம்ப நன்றிங்க :)

    அதியமான் நெடுமானை பத்தி எழுத முயற்சியுங்கள் தல :) வாழ்த்துக்கள்

    தொடர் பதிவுகளிலே இது ஒரு புதுமையான தொடர் பதிவுதான் . வரலாறு என்பது மிக முக்கியம் . ஆனால் இன்றைய நிலையில் அதை அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நம்மில் பலர் மறந்துகொண்டிருக்கிறோம் . ஆனால் இந்த மன்னர்கள் பற்றிய தொடர் பதிவு மீண்டும் வரலாற்றை ஆழமாக பலரின் இதயங்களில் பதிவு செய்யும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை .

    சிறந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் !

    பதிவை தொடர இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் .

    ஆகா! நல்ல சிந்தனை. உபயோகமான தொடர்பதிவு. கேள்விப்படாத மன்னர். வாழ்த்துக்கள் ஜில்தண்ணி

    தொடர்பதிவு எழுத போகும் தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள்

Related Posts with Thumbnails