கைரேகை பாக்கலையோ....



இங்கு கை ரேகை பார்க்கப்படும் !!!

இப்படி விளம்பரங்கள் செய்து கொண்டு வீதிகளில் சம்பாதித்து வருகின்றனர் பலர்

உன் வாழ்கை உன் கையில் (இது பாட்ஷா பட பஞ்சிங்கோ ) என்பதை விட்டுவிட்டு பலர் இந்த கை ரேகைகளில் எதிர்காலம் ஒளிந்திருப்பதாக நம்புகின்றனர்

அந்த மூட நம்பிக்கை தான் அவர்களுக்கு மூலதனமாகிறது

கையை காட்ட சொல்லி புதன் மேடு,சுக்கிர மேடு என்று அடுக்கடுக்காக மேடுகளை பார்த்து முடிவாக " வருகிற சித்திரை மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு செல்வம் கொழிக்கும்,வளம் பெருகும் என்று புழுகுவார்கள்.

இந்த குறியெல்லாம் நிறைவேருதோ இல்லையோ , உங்கள் கரங்களை பார்த்து
நீங்கள் எந்த அளவிற்கு ஆரோகியமானவர் என்று சொல்லிவிட முடியுமாம்,உடல்நிலையின் எதிர்காலத்தையும் ஓரளவிற்கு கணிக்கலாம்

ஆம்,கனடா நாட்டில் உள்ள மத்திய லாங்க்ஷைர் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஜான் மேனிங் இன் ஆராய்ச்சி தான் இது..

விரலின் நீளமும் ஆரோக்கியமும் என்று ஆராய்ந்தார்...

அதன் முடிவுகள் சில

உதாரணமாக ஒரு மனிதன் விரலின் நீளம் அவன் வலிமையை வெளிப்படுத்தும் என்கிறார் அவர்

ஒரு சிறுவனின் மோதிர விரலின் நீளத்தை கொண்டே அவனுக்கு ல் வரும் பிற்காலத்தில் வரும் இதய நோயை பற்றி கண்டு பிடிக்கலாமாம்

மோதிர விரலை விட சுட்டு விரலின் நீளம் அதிகமாக உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய் வர வாய்ப்பிருக்கிறதாம்

ஆண்களின் சுட்டு விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் பெருஞ்சுரப்பி நோய் வரலாம் என்கிறார்

இந்த நோய்களை முன்பே கண்டு பிடிக்கும் திறமை கிரேக்கர்களிடம் இருந்ததாக
வரலாறு கூறுகிறது

கை மடிப்புகளின் நிறம் மற்றும் நகங்களின் சிவப்புத்தன்மையை கொண்டும்
ஒருவருக்கு இரத்தசோகை இருக்கிறதா என்று சொல்லி விடலாமாம்

நமது பாதங்கள் ,நம்முடைய உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது தானாம்
பாதத்தை பார்த்தும் சிகிச்சை முறையை கண்டுபிடிப்பார்கலாம்

என்ன முழுசையும் படிச்சிடிங்களா.....

இனி ஜில்தண்ணி ஐடியா

உங்கள் உள்ளங்கையை விரியுங்கள் ,சுட்டு விரலின் அடிப்பாகத்தில் உள்ள மேட்டில்(இது அந்த மேடு இல்லிங்கோ) ,இன்னொரு கையின் பேரு விரல் நுனியை பதியுங்கள்.

பின்னர் பேரு விரல் நுனியை மெதுவாக அழுத்தி சுற்றுங்கள்

நன்றாக இருக்குமே

ஏன் என்றால் அந்த மேடு தான் நமது உணர்ச்சி மையம்....

இதை செய்து பார்த்து அருமையாக உள்ளதாக கூறுபவர்களுக்கு (புளுகுபவர்களுக்கு) ஜில் தண்ணி கிடையாது ....

சூடோ ஜில்லோ உங்களால முடிஞ்ச தண்ணிய கொஞ்சம் ஊத்திட்டு(பின்னோட்டம்) போடுங்கப்பா

318 Response to "கைரேகை பாக்கலையோ...."

«Oldest   ‹Older   401 – 318 of 318   Newer›   Newest»
«Oldest ‹Older   401 – 318 of 318   Newer› Newest»
Related Posts with Thumbnails