விவசாயாமா அப்டின்னா ?

நாத்து பறிப்பது முதல் களையெடுத்தல்,அறுவடை வரை மனிதசக்தியை மட்டுமே நம்பி விவசாயம் செய்து கொண்டிருந்த நாம் இப்போது அத்தனையையும் எந்திரத்தை வைத்தே செய்து முடிக்கிறோம் .

எல்லாம் அறிவியலின் சாகசங்கள் தான்.ஆனால் இன்னும் சில வருடங்களில் இந்த அறிவியல் உன்னதங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய நிலங்களே இருக்காது என்பது தான் கவலைக்கிடம்.

என் தாத்தா விவசாயநிலத்தில் இறங்கி உழைச்சாங்க ,அப்பா சாப்பாட்டுக்காவது வேண்டுமேன்னு விவசாயம் செய்றாங்க.அடுத்து நானோ வயல்களில் கால் வைப்பதை கீழ் தரமாக நினைக்கிறேன்,எங்கப்பாவால் முடியும் வரைதான் விவசாயம் அடுத்து அந்த நிலத்த ப்ளாட்டா மாத்திடுவேன் அவ்ளோதான்.

இது என்னோட எண்ணம் மட்டுமல்ல.இதுதான் இப்போதைய நிலைமை.




பல பல ஏக்கர் நிலங்களை வைத்து விவசாயம் செய்யும் முதலாளிகள் முதல் ஒரு வேலி நிலமே வைத்திருக்கும் சாதாரண கூலி வரை தங்கள் பிள்ளைகள் படித்து பட்டம் வாங்க ஒரு அரசு உத்தியோகத்திலோ அல்லது வேறு நல்ல வேலையிலோ அமர வைப்பதுதான் அவர்களின் ஆசையாகவும் கடமையாகவும் இருக்கிறது.

தான் பட்ட கஷ்டம் மகனும் படக்கூடாது என்பது தான் அவர்களின் எண்ணம் அவர்களை சொல்லிக் குற்றமில்லை.

இப்படி படித்து நல்ல வேலையில் அமருகின்றோம் ,அப்பா இருக்கும் வரை விவசாயத்தை கருமமேன்னு செய்கிறார். அதன்பின் கொஞ்ச நிலமாக இருந்தால் உடனே பைசல்,அதிகமா இருந்தா ப்ளாட்டுகள் தான், யார் விவசாயமெல்லாம் செய்யுறது ?

இந்த எண்ணம்தான் மாறனும், நம்  உணவுத் தேவையையாவது நாமே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்காவது விவசாயம் செய்யனும்.

நான் புதுசா நிலம் வாங்கி விவசாயம் பண்ண சொல்லலீங்க, கொஞ்சமோ நஞ்சமோ நிலம் வைத்திருப்பவர்களாவது இதை செய்யலாம்ல!

முடியுமா நீங்க சொல்லுங்க ?

நானும் அந்த 140 எழுத்துக்களும்

என்னத்த சொல்றது போங்க, இப்பலாம் எது யோசிச்சாலும் சரி எழுதினாலும்  சரி எல்லாமே சின்னாதாவே வருது,பரிட்சையில 16 மார்க் கேள்விக்கும் ரெண்டு மார்க் கேள்விக்கும் ஒரே அளவு பதில் தான் வருது

எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்,அவன்தாங்க ட்விட்டர் , இனி பரிட்சை கேள்வி தாளில் எல்லா வினாக்களுக்கும் 140 எழுத்துக்களில் விடையளின்னு   இருந்தா கூட தேவலாம் என்கிற அளவுக்கு என்னை ட்விட்டர் அடிமையாக்கி இருக்கிறது

நிறைய மொக்கை கவிதலாம் எழுதுறன் அதுக்கு காரணம் "அவள்" இல்ல ட்விட்டர் தான்,இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா என்னோட பதிவும் 140 எழுத்துக்கு சின்னதா  ஆனாலும் ஆகும்

ட்விட்டர் இன்னக்கி இணையத்தின் இன்றியமையாததாகிவிட்டது, ட்விட்டருக்கு  முன் கூகுளின் ஆர்குட்டும்,மூஞ்சி புத்தகமும் டம்மி பீசுகளாய் வளம் வந்து கொண்டிருக்கின்றன (இன்னமும் யாராவது ஆர்குட் யூஸ் பண்றீங்களா என்ன :) )


எது நடந்தாலும் ஊருக்கு முன்னாடி  முதல்ல ட்விட்டேருக்கு சொல்லிடுறேன், வாந்தி வந்தாலும்  சொல்றன், பூந்தி தின்னாலும் சொல்றன், மொத்ததுல ட்விட்டர் ஒரு குட்டி நண்பன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி வந்தது வந்துட்டீங்க சில பல  ட்விட்டுகளை   படிச்சிட்டு போங்க :)

@@ அவள் அன்று கண்களால் கடித்ததால் ஏற்ப்பட்ட காதல் புண் இன்று வடுவாகியும் சுகமாய் வலிக்கிறதே #காதல் சுகம்

@@ போன வாரம் சுட்ட ஊசிப் போன வடையை கூட சகித்து சாப்பிட்டு விடுவேன் இந்த பாழாய் போன பீசாவை எவன் திம்பான் #பிசா கார்னரின் கார்னரில்


@@ அன்று என்னவளின் ஏகாந்த சிரிப்பினில் ஏழையாய் ஏமாந்து போனதன் விளைவு இன்று என்னையே எனக்கு எவனென்று தெரியாமல் எத்தனிக்கிறேன் #toolate   
 
@@ தோழியிடம் மீசையை எடுத்தால் கமல் மாதிரி இருப்பேனா என்றேன்,ஆம் என்றாள் எடுத்துவிட்டேன் அப்பரம் தான் சொல்கிறாள் அது "குணா" கமல் என்று #அழகு
 
@@ மூன்று வருடம் முக்கி முனகி அவள் முன்னால் மண்டியிட்டு மாரடித்த மணித்துளிகளில் மரணித்து மக்கியிருந்தால் மனிதனாயிருக்கலாம் #toolate   

@@ அவளின் நினைவலையின் எச்ச சொச்சங்களை பொறுக்கி பொட்டலம் போட்ட நேரத்தில் அப்பா கடையில் பொட்டலம் போட்டிருந்தால் எப்பவோ பொழச்சிருக்கலாம் #toolate 

@@ என்னதான் செக்க செவேலுன்னு இருந்தாலும் சேட்டு பொண்ணுங்கள பாத்தா ஜொள்ளு விட தோணல #என்னுமோ தெர்ல

டிக்கெட்

காலை 8.30 மணி - பேருந்து நிலையம்

காலேஜ் வழியா  செல்லும் நகரப் பேருந்து வருதான்னு எட்டி பார்த்த பிரபாவுக்கு அவன் ஃபிகர் அங்கு நின்று கொண்டிருந்ததை பார்த்த போது  ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்

என்னடா எப்போதும் காலேஜ் பஸ்லயே போயிடுவா,இன்னக்கி இங்க நிக்கிறா,சரி நமக்கடித்த அதிர்ஷ்டம் என்று தன்னுள் சொல்லிக் கொண்டு சிரித்தான் அவன்

பேருந்தும் வந்தது அவள் அசால்ட்டாக முன் புறம் ஏறி நின்று கொண்டாள், நண்பர்கள் டேய் அடுத்த பேருந்தில் போகலாம் டா என்று கத்தியும் காதில் விழாதது போல் அவனோ பின் புறமாக முட்டி மோதி அவளுக்கருகில் போய் நின்றான்

முழு நிலவைப் போல் பிரகாசித்திருந்தது அவன் முகம்,அவள் சிரிப்புச் சில்லரைகளை சிதற விட இவன் ஒவ்வொன்றாய் பொறுக்கிக் கொண்டிருந்தான்


இவ்வளவு நெருக்கத்தில் பிரபா இதுவரை அவளை பார்த்ததில்லை,கிறக்கத்தில் அங்கு நடந்தது யாவும் ஊமைப் படமாகவே தெரிந்தது அவனுக்கு

அங்கு எவனோ இந்த பாடலை வேறு ஓடவிட்டிருந்தார்கள்

காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை
தீயின் குடுவையில் அடைத்தால் கண்ணை

திடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈரென்று     சடன்      பிரேஏஏஏஏஏஏஏஏஏஏஏக்
போட்டு ஓரங்கட்டினார் டிரைவர்

காரணம் டிக்கட் செக்கிங் செய்கிறார்களாம்

வெள்ளை சீருடை அணிந்த இருவர் இரு பக்கமும் நின்று கொண்டு ஒவ்வொருத்தராக செக் செய்தனர்

அப்போது தான் பிரபாவுக்கு தோணியது ஆஹா நாம டிக்கட் எடுத்தோமா தெரியலயேன்னு  சட்டை பையை துழாவியதில் கிடைத்தது சில சில்லரை காசுகள் மட்டுமே

ஒவ்வொருவராக  டிக்கெட்டை காட்டிக் கொண்டிருந்தனர்

பிரபாவுக்கு இப்போது முற்றிலும் வியர்த்து விட்டது

ஆஹா டிக்கெட் எடுக்கலன்னா இவனுக எப்புடியும் ஒரு 150 ரூவாயாவது தாளிச்சிருவானுங்க,ரூல்சு பேசினா ஃபைன் 500 கட்றியான்னு கேப்பாங்க

அவனுக்கு என்ன செய்வது என்று புரியல,இப்ப பையில் இருப்பது எல்லாத்தையும் தேத்துணா கூட முழுசா முப்பது ரூவா கூட தேறாது,பயலுவோ கூட வந்தாலாச்சும் அவனுகளாவது எதாவது வழி செய்திருப்பானுங்க  என்று பல கோணங்களில் இருந்தும் யோசனை வந்தது

இந்த பொண்ண பாத்து வாய பிளந்து பேருந்தில் ஏறினது என் தப்பு  என்று தலையிலடித்துக் கொண்டான்

அதற்குள் அந்த டிக்கெட் செக்கிங் ஆசாமி அவனை பார்த்து டிக்கெட் எங்கப்பா எடுத்து குடுத்துட்டு போப்பா,காலேஜுக்கு மணி ஆகலயா இன்னும் ?

அவன் என்னுமோ பத்து இட்லியை வாயில் வைத்திருப்பதை போல் "டிக் டிக் டிக்கெட்" என்று மழுப்பி விட்டான்

அதற்குள் அந்த ஆசாமி " ஓ உங்கிட்ட இருக்குறது பஸ் பாசா,சரி அத காட்டு"

அப்போது தான் பிரபாவுக்கு 300 வாட் பல்பு எறிந்து  நினைவுக்கு வந்தது,ஆமாம் நம்மகிட்டதான் பஸ் பாசு இருக்குள்ள,அப்பரம் என்ன பயம்...

பிரபா தலையில் அடித்துக் கொண்டு சிரித்தான் " சே அந்த பொண்ண பாத்ததும் இது கூடவா மறந்து போகும் மரமண்டையாட நீ "

டிஸ்கி : இது உனக்கு நடந்த உண்மை கதையான்னு யாராவது கேட்டீங்க,அப்பரம் ஆமான்னு சொல்லிடுவேன் ஆமாம் :)

கல்லூரிக் கலாட்டாவும் சில கவிதைகளும்

ஒரு ரெண்டு மூணு வாரமா இநத பக்கம் வர முடியாம போயிடுச்சி, மொக்கைகள் கம்மியா இருக்கு,ஆளாலுக்கு உருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க,இப்படியே போனா தமிழ் பதிவுலகம் என்னாவது சரி அதான் மொக்கை ரிட்டன்ஸ்

காலேஜும் போக ஆரம்பிச்சாச்சு புது நண்பர்கள் நிறைய பேர் கிடைச்சிருக்காங்க(தோழிகள் கிடைக்கலன்னு சொன்னா நம்பவா போறீங்க),புது சூழ்நிலை எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு

                                      *****************************

முதல் நாளே வாந்தி சாரி வாத்தி ஒருவர் யாரெல்லாம் ப்ளாகரா இருக்கீங்க,கைய தூக்குங்கன்னு சொல்ல,நான் மட்டும் தைரியமா கைய தூக்கிட்டேன்(ஆமாம் நான் ப்ளாகரா ?),  நான் மட்டும் கை தூக்க ஊரே என்னை பார்க்க ஆரம்பத்தது, அந்த வாத்தி whats your latest blog என்று கேட்க நான் கோக்குமாக்கு என்று  உளர,என்னை பாத்து  அத்தன பொண்ணுங்களும் சிரிக்க எப்படியோ சமாளிச்சேன்

                                      *****************************

ஒரு வாரக் காலத்தில் எல்லா பய புள்ளங்களுக்கும்  பட்டப் பேர் வச்சாச்சு, எனக்கு என்ன பேர் வச்கிருக்காங்கன்னு சொல்ல மாட்டேனே ( தெறம தெறம) :)

                                    *******************************

சென்னை வாழ்க்கையை  நல்லா அனுபவிக்கிறேன் முன்பு போல் விடியற்காலை 11 மணி வரை தூங்க முடியாவிட்டாலும்  முன்னிரவு 5.30 மணி வரை தான் தூங்க முடிகிறது(தாங்க சாரி தூங்க முடில)


                                    ********************************
மொக்க கவுஜைகள் ரிட்டன்ஸ்


சென்ற வருடம்
காதலித்த அவளுக்காக
எழுதிய கவிதையை
இப்போது காதலிக்கும்
அவள் படித்துப் பார்த்து சிரிக்கறாள்
அவளுக்கென்று நினைத்து

++===++===++===++===++===++


என் 
வாழ்க்கை பேனா 
அவன்,அவள்களை 
படித்து எழுதியதால் 
எப்போதும்
மகிழ்ச்சியில் 
பொங்கியே 
இருக்கிறது 
==++===++==++==++===++===
 நான் 
அவளோடு அதிகம் பேசிய
வார்த்தை 
"மௌனம்"
==++==++==++==++==++==++==++
என் அழகுப் பேயின் 
கன்னக் குழிகளில் 
காதல் ரசத்தை 
ருசித்ததால நான் 
என் வசம் இல்லாமல் போனேன்
டிஸ்கி :  நேரம் இல்லாததால்  சரியா மொக்கை போட முடியல,கூடிய சீக்கிரம் ஃபுல் ஃபார்முல ஆரம்பிச்சிடுறேன்

கோக்குமாக்கு -- 03 / 09 / 10

குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு
குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு

என்னடா குவாட்டர் அடிக்க காசு கேக்குறானான்னு பாக்குறீங்களா, சீ நான் ரொம்ப நல்ல பையன் ,சரக்க அடிக்காத எனக்கே இப்டி மப்பு ஏறிடிச்சுனா,உங்களுக்கு சொல்லவா வேணும்

வேற ஒன்னும் இல்லங்க குவாட்டர் கட்டிங் பட பாடல்களை தான் சொல்றேன்,மெய்யாலுமே செம கிக்கு ஏறுதுங்க,பாடம் வரிகளும் தாரு மாறு 


குடி குடிய கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க புடிக்குமடி
மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
குவாட்டரு மேட்டரு கிடைக்கலயே

ஓசில குவாட்டர் கட்டிங் ஊருகாய் டயலாக்குகளுடன் தராங்க,சும்மா எடுத்து குடிங்க :)

குவாட்டர் கட்டிங் உபயம் : தயாநிதி அழகிரி (படத்துலயும் நீங்க தானா)

====####====####====####====####====####====####====####====####====####====

6காட்டாருக்கு நான் ஒரு பெரிய நன்றி சொல்லியே ஆகனும்,எப்ப பாத்தாலும் இந்த பொட்டி முன்னாடியே குந்திகினு இருப்பேன், இப்பதான் தினமும் மூணு மணி நேரம் எங்கூர்ல கரண்ட அடக்கிடுரானுங்களா,வேற வழியே இல்லாம புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பிச்சுட்டன்

இப்ப படிச்சிகினு இருக்குறது பா.ராகவன் சாரின் "தலிபான்" என்ற புத்தகம்

====####====####====####====####====####====####====####====####====####====

எங்க போனாலும் இந்த பாகிஸ்தான் என்றாலே பிரச்சன தானா,பாகிஸ்தான் வீரர்களுக்கு இது ஒன்னும் புதுசு கிடையாது, நல்ல ஃபார்முல விளையாடிக் கொண்டு இருப்பானுங்க,திடீர்னு கப்பு வாங்குவானுங்க,திடீர்னு சஸ்பெண்டும் ஆவானுங்க,இதே பொழப்பா போச்சு  

அதிலேயும் ஆசிப் போன வருசம் ஊக்க மருந்து பயன்படுத்தியாதா கண்டுபுடிக்க பட்டு ஒரு வருசம் ஓரமா ஒக்கார வச்சாங்க, அந்த ஒரு வருசத்துல ஒரு ஃபிகரையும் நல்லா உசார் பண்ணிட்டாரு, இப்ப திரும்பவும் சூதாட்ட மேட்டர்ல மாட்டிகிட்டாரா,பாவம் ஆசிப்பு

ஃபிகரும் போச்சு,மானமும் போச்சு(அது இருந்தா தான) எல்லாமே போச்சு :)




====####====####====####====####====####====####====####====####====####====

ரொம்ப நாளா நம்ம குத்தாலத்தான் மூஞ்சி புத்தகத்துக்கு வா வான்னு கூப்டுகிட்டே இருந்தான்,சீ என்னாடா இருக்கு அதுலன்னு நான் போகவே இல்ல

இப்பதான் FACEBOOK PROFILE  கிரியேட் பண்ணிருக்கேன், ட்விட்டர் மாதிரிலாம் இல்ல ரொம்ப போர் அடிக்குது

யாராவது போட்டா,கீட்டா,வீடியோ,கீடியோன்னு அப்லோட் பண்ணுனா பாக்கலாம் அவ்ளோதான் ஒன்னும் தேறாது :(

====####====####====####====####====####====####====####====####====####====

ஞாயிற்றுக் கிழமை முதல் நானும் சென்னைவாசி ஆகப் போறேன் அதாங்க  வரும் திங்கள் கிழமையிலிருந்து காலேஜ் போகணுமாமே, ஆஹா இனி கும்பளா கும்மி அடிக்க முடியாதேன்னு ரொம்ப  கவலையா இருக்கு :(

எந்த காலேஜுன்னு கேக்குறீங்களா அதாங்க Eeshwari college of engineering,ramapuram

சென்னைக்கு நான் புதுசாச்சா ஒரு மாசத்துக்கு ஒரு ரூட்டும் எழவும் புரியாது அதையும் தான் பாப்போம் என்ன நடக்குதுன்னு :)

இனி ஜில்தண்ணி சென்னையிலிருந்து சப்ளை செய்யப்ப்டும்

இரவுக் கவிதையும் இரவல் கவிதையும்

தூக்கம் எதிரியாய் தெரியும் சில இரவுகளில் மனதில் கிறுக்கியவை சில

*** இரவுக் கவிதைகள் ***


அவளெனும் 
வீணையை மீட்டினேன் 
உச்சஸ்தாயியில் 
பிறந்தது 
மௌன ராகம்....

###############################

இலக்கணமில்லா
கவிதையும் தீருமோ 
அந்த 
அழகின் இலக்கணத்திற்கு 
முன்னால்

###############################

அன்று 
வெட்கச் சிணுங்களில் 
ஒளிந்து மறைந்தவள் 
இப்போதும் 
சிணுங்குகிறாள் 
என்னுள் 
ஒளிந்து கொண்டு 
 
###############################
 
அவள்
பார்வையால் 
தீணி போடாததால் 
இப்போது பசியெடுத்து 
கத்த ஆரம்பித்துவிட்டது
கா...கா....காதல்
 
 
 *** இரவல் கவிதை  ***
 
எத்தனை முறை தான் என்னோட கவிதைய படிச்சி அலுத்துப் போயிருப்பீங்க, அதான்  ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தோழி மதுர பொண்ணுகிட்ட சில கவித எழுதி கேட்டேன்...அதையும் பாருங்க

அன்பே உன் நினைவலைகள்
கனல் நெருப்பாய் என்னை
கடந்து செல்வதால்
கண்களை மூடினாலும்
அதிலும் நீ மட்டுமே தெரிகிறாய்.
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
உனக்கான அழகிய கவிதையொன்றை
அலசி கொண்டு இருந்த போது
உனக்கே உரித்தானதாய் ஒரு கவிதை
பறந்து வந்தமர்ந்தது 
அதுவோ
உனக்கான கவிதை இந்த
உலகத்தில் இல்லை என்ற
செய்தியையே கொண்டு வந்து இருந்தது!

இதென்ன கல்வியா ?

முஸ்கி : என்னடா என்னுமா தேடல்,இடைவேளை,சந்தேகம்ன்னு போன பதிவுல கொழப்புனவனாச்சேன்னு பாக்குறீங்களா,இனி  நம்ம  ரவுண்டு தான் 

 பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 க்கு 400க்கு மேல் எடுத்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பதினொன்றாம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்கிறது சில பள்ளிகள் அதுவும் மெட்ரிக் பள்ளிகள்,இப்படி நன்றாக படிப்பவர்களை மட்டும் வைத்து பாடம் நடத்தி பரிட்சை எழுத வைத்து பின் பீத்திக் கொள்வது "மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி" என்று

இது பெரிய சாதனை மயிரா,யோவ் பத்தாம் வகுப்பில் 250 எடுத்தவனுக்கு பயிற்சி கொடுத்து பனிரெண்டாம் வகுப்பில்  முன்னேற்றி காட்டு ஒத்துக்குறேன்


அரசு பள்ளிகளிலிருந்துதான் விளையாட்டுத் துறைக்கு அதிக மாணவர்கள் வருகிறார்கள் என்பது சந்தோசத்திற்குரிய விசயம்,ஏன்னா முக்கால்வாசி மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு வாய்க்காத ஒன்றாகிவிட்டதே

விளையாட்டுத்தான் சொல்லித் தரல பாடமாவது ஒழுங்கா சொல்லிக் கொடுக்குறானுவோளா இந்த மெட்ரிக் பள்ளிகளில் என்று பார்த்தால்,அதுவும் கவலைக்குரிய நிலை தான்

நான் படித்த மெட்ரிக் பள்ளி ஒன்றின் நிலைமையை பாருங்களேன்

@@  விளையாட்டுதான் இல்லையென்பதால் மைதானமும் இல்லை

@@  ஆசிரியர்களாக  பணிபுரியும் அத்துனை பேரும் பெண்கள்,ஏன்னா அவங்க தான் கேள்வி கேக்காம கொடுக்குற சம்பளத்த வாங்கிட்டு போயிடுவாங்க

@@   LKG வகுப்புக்கு பாடம் நடத்துபவர் பட்டதாரியாக இருக்க வேண்டாம், பத்தாம் வகுப்புக்கு நடத்துபவர் கூட  பட்டம் பெற்றவராக இல்லையே
 
@@  கல்லூரியில் வேதியல் படித்தவரை இங்கு வரலாறு நடத்த சொல்கிறார்கள்,அவரும் நடத்துகிறார் (வேறு வழி)

@@   ஒரு எழவையும் மாணவர்களுக்கு நடத்தாமல் பொட்ட மனப்பாடம் செய்ய சொல்லி பரிட்சை எழுத வைக்கிறாங்க

@@  விளையாட்டுமில்ல,பாடமும் நடத்த வக்கில்ல  டாய்லட் கூடவா சுத்தம் செய்யாமையா இருக்கனும் கொடுமடா

@@  இவனுக கரெக்டா செய்யுற ஒரே வேலை என்னான்னா மாசம் ஒன்னாந்தேதி ஆனா FEES பணத்த வாங்கிடுறது தான்

@@  ஆயிரம்,ஐநூறுன்னு வேனுக்கு பணம் வாங்குறானுங்க,வேனோட நிலைமையா பாத்தா ரொம்ப கவலைக்கிடம்

@@  ஓட்டும் டிரைவருக்கு லைசன்சு இல்ல

@@  ஒரே ட்ரிப்பில் 60 பேரை ஏத்தி பிஞ்சுக் குழந்தைங்க உசுரெடுக்குறது

@@  இவனுக கெட்ட கேட்டுக்கு டொனேஷனும் எட்டாவது சேர்க்க என்ட்ரன்சு எக்சாமும்  ஒரு கேடு :(

இந்த மாதிரி பள்ளிகளில் படித்துவிட்டு எங்க போய் கிழிக்கிறது,என்னுமோ சமச்சீர் கல்வி வரப்போகுதாமே,அது என்ன கிழிக்கிதுன்னு பாப்போம்

Related Posts with Thumbnails