விவசாயாமா அப்டின்னா ?
நாத்து பறிப்பது முதல் களையெடுத்தல்,அறுவடை வரை மனிதசக்தியை மட்டுமே நம்பி விவசாயம் செய்து கொண்டிருந்த நாம் இப்போது அத்தனையையும் எந்திரத்தை வைத்தே செய்து முடிக்கிறோம் .
எல்லாம் அறிவியலின் சாகசங்கள் தான்.ஆனால் இன்னும் சில வருடங்களில் இந்த அறிவியல் உன்னதங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய நிலங்களே இருக்காது என்பது தான் கவலைக்கிடம்.
என் தாத்தா விவசாயநிலத்தில் இறங்கி உழைச்சாங்க ,அப்பா சாப்பாட்டுக்காவது வேண்டுமேன்னு விவசாயம் செய்றாங்க.அடுத்து நானோ வயல்களில் கால் வைப்பதை கீழ் தரமாக நினைக்கிறேன்,எங்கப்பாவால் முடியும் வரைதான் விவசாயம் அடுத்து அந்த நிலத்த ப்ளாட்டா மாத்திடுவேன் அவ்ளோதான்.
இது என்னோட எண்ணம் மட்டுமல்ல.இதுதான் இப்போதைய நிலைமை.

பல பல ஏக்கர் நிலங்களை வைத்து விவசாயம் செய்யும் முதலாளிகள் முதல் ஒரு வேலி நிலமே வைத்திருக்கும் சாதாரண கூலி வரை தங்கள் பிள்ளைகள் படித்து பட்டம் வாங்க ஒரு அரசு உத்தியோகத்திலோ அல்லது வேறு நல்ல வேலையிலோ அமர வைப்பதுதான் அவர்களின் ஆசையாகவும் கடமையாகவும் இருக்கிறது.
தான் பட்ட கஷ்டம் மகனும் படக்கூடாது என்பது தான் அவர்களின் எண்ணம் அவர்களை சொல்லிக் குற்றமில்லை.
இப்படி படித்து நல்ல வேலையில் அமருகின்றோம் ,அப்பா இருக்கும் வரை விவசாயத்தை கருமமேன்னு செய்கிறார். அதன்பின் கொஞ்ச நிலமாக இருந்தால் உடனே பைசல்,அதிகமா இருந்தா ப்ளாட்டுகள் தான், யார் விவசாயமெல்லாம் செய்யுறது ?
இந்த எண்ணம்தான் மாறனும், நம் உணவுத் தேவையையாவது நாமே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்காவது விவசாயம் செய்யனும்.
நான் புதுசா நிலம் வாங்கி விவசாயம் பண்ண சொல்லலீங்க, கொஞ்சமோ நஞ்சமோ நிலம் வைத்திருப்பவர்களாவது இதை செய்யலாம்ல!
முடியுமா நீங்க சொல்லுங்க ?