மூனு வருசம் முக்கி முக்கி படிச்சி B.sc முடிச்சாச்சி, கடைசி செமஸ்டர் ரிசல்ட்டும் வந்துச்சு, நல்ல வேளை அரியர் ஒன்னும் விழல,சரி அடுத்தது என்னான்னு யோசிச்சா,கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் தெரிஞ்சது MCA மட்டும் தான்,திரும்ப மூனு வருசம் படிக்கனுமாம் அதான் பிரச்சனையே :(
சரி நாம பாக்காத படிப்பா,அதையும் பாத்துடுவோம்னு போணோம்,இந்த MCA வுக்கு tancet,tancet ன்னு நுழைவுத் தேர்வு வைக்கிறார்கள் (ரெண்டு தேர்வான்னு கேக்க பிடாது ).அதுல ஒரளவுக்கு மார்க் எடுத்தா தமிழ்நாட்டுல உள்ள முன்னனி கல்லூரி எதுலயாச்சும் கண்டிப்பா இடம் கிடைக்கும்,அங்கெல்லாம் 100 சதவீதம் campus placement தருவாங்கன்னு ஆசைய வேற கிளரி விட்டுட்டாயிங்க :)
சரி உடனே அந்த நுழைவுத் தேர்வுக்கும் அப்ளை செய்தேன்,அதோடு சரி என்னுமோ பிரிப்பேர் வேற செய்யனுமாமே,நாங்கெல்லாம் செமஸ்டர்க்கே தூங்கி எழுந்து அப்டியே போற ஆளுங்க,இது என்ன பிஸ்கோத்து பரிட்சை :)))
அந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் நாளும் வந்துச்சி,கூட்டமா போனோம்,அண்ணாமலை பல்கலையில் தான் நடந்தது,சீக்கிரமா போய் உருப்படியா சைட் மட்டும் தான் அடிச்சோம்(நமக்கு வேற என்ன தெரியும்)
அவனவன் ஃபார்முலா,அது இது லொட்டு லொசுக்குன்னு கடைசி நேரத்துல விழுந்து விழுந்து படிச்சிகினு இருந்தானுவோ, நாங்க சாவகாசமா கால ஆட்டிகிட்டு அவனுகள பாத்து சிரிச்சிகிட்டு இருந்தோம்(எவ்வளவு கஷ்டமான வேலை தெரியமா)
பரிட்சை நேரமும் வந்துச்சி,என் ஹால பார்த்து போய் உட்கார்ந்தேன்,சோத்தாங்கை பக்கம் ஒரு அட்டு பிகரு ஒக்காந்திருந்துச்சி(அந்த பக்கம் திரும்பவே முடியல),முன்னாடி பய புள்ள ஒருத்தன்,ஆனா எனக்கு பக்கத்து சீட்டு மட்டும் காலியா இருந்தது.
பென்சில தீட்டிக்கிட்டு இருந்தேன்(அப்பரம் மூளையா இருக்கு தீட்ரதுக்கு) ,EXCUSE ME SIRன்னு வெளியிலிருந்து ஒரு சத்தம்,யார்னு பாத்தா ஒரு செம செம ஃபிகர்,சட்டுனு உள்ள வந்து என் பக்கத்துல ஒக்காந்துச்சி(புரியுது கொஞ்சம் கேப் விட்டுத்தான்).எனக்கு ரொம்ப சந்தோசம்
இந்த ரெண்டு மணி நேரம் பொழுத போக்குறதுக்கு இத விட நல்ல ஐடியா இருக்க முடியாது,கொஸ்டின் பேப்பர் கொடுத்தாங்க,ஆன்சர் பேப்பரும் கொடுத்தாங்க,கொஸ்டின் பேப்பர பிரிச்சி நமக்கு தெரிஞ்ச ஒரு கேள்வி கூடவா இருக்காது பிரித்தேன் (ஆமாமாம்)
தேடினேன் தேடினேன் ஆங்கில இலக்கணத்தில் தேடினேன், கனிதத்தில் தேடினேன்,கணிப்பொறி பிரிவில் தேடினேன்.ஒன்ணே ஒன்னு தெரிந்தது என்ன REGISTER NUMBER ன்னு ஒன்னு கேட்டிருந்தாங்க,அத ரொம்ப ஈசியா எழுதிட்டேன்,ஹால் டிக்கெட்ட பாத்தே (அடடா இது தான் உள்வளத் திறமையா)
ஒரு எழவும் தெரியல,அரை மணி நேரம் வீணா போனது தான் மிச்சம்(ஆமாம் மிச்ச நேரத்துல கிழிச்சிட போறாறு),சரி பக்கத்துல உக்காந்திருக்குற பொன்னயாவது பாப்போமே ன்னு பாத்தேன்,என்ன கொடும அது கணக்கெல்லாம் போட்டுப் பாக்குது அந்த புள்ள(ரொம்ப பேட் கேர்ள்)
1 மணி நேரம் இப்டியே ஓடுச்சி, அப்போதைக்கு ஒரு திடீர் ஞானோதையம் இங்க நடந்ததையெல்லாம் நம்ம பதிவுல போட்டா எப்டி இருக்கும் ? போட்டா ஒரு முப்பது ஓட்டு விழாது (ஆமாம் ரொம்ப முக்க்கியம்),இப்டி யோசிச்சிகிட்டே ஒரு அரை மணி நேரம் தூங்கிபுட்டேன்(கண்ண தொரந்துகிட்டே)
திடீர் மணி அடித்தது என் மண்டைக்குள்ளும் தான்,கடைசி அரை மணி நேரம் தான் பாக்கி இருக்கு எழுத வேண்டிய கேள்விகள் மீதமிருப்பது 100 மட்டும் தாம் (மொத்தமே அதுதானே)
சரி நம் அறிவுக்கு சரியான் டெஸ்ட் தான் (அது இருக்கா),இனிமேல் யோசிச்சி எழுதுனா 10 கூட எழுத முடியது,யோசிச்சேன்(மூக்குல கைய வச்சிகிட்டு தான்) :)
கொஸ்டின் பேப்பர ஓரமா வைத்துவிட்டு,ஆன்சர் ஷீட்ட மட்டும் எடுத்தேன்,எல்லாமே கொள்குறி வகை கேள்விகள்(choose the right answer) தான் என்பதால்,என் அறிவை பயன்படுத்தி D,A,B,C,A,D,C,B,C,A,D கால் மணி நேரத்தில் 50 வினாக்களுக்கு இப்படியே விடையளித்து விட்டேன்(மிகப் பெரிய சாதனை தான்),மீதம் 50 சாய்ஸ்ல விட்டுடேன்(என்னோட சாய்ஸ்தான்)
இதுல என்ன கூத்துனா தவறான பதிலுக்கு நெகட்டிவ் மார்க் வேற எடுப்பானுங்களாம்,அடக் கொடுமையே நமக்கு வர்ரதே ஒன்ணோ ரெண்டோதான் அதையும் எடுத்துட்டா !! எங்க போறது (துபாய்க்கு)
பரிட்சை முடிச்சி வந்தா அவனவன் ஆன்சர் சொல்லிப் பாக்குறானுவோ,ஹா ஹா நமக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல!!
ஒருத்தன் சொன்னான் கன்ஃபார்மா 30 என்றான்,இன்னொருத்தன் 22 என்றான்,நான் சிரிச்சிகிட்டே எனக்கு -3 என்றேன் (உண்மைதானே)
சரி எழுதியாச்சு ரிசல்டும் வந்தது,மார்க பாத்தா எல்லாம் தலைகீழ் , 30 சொன்னவனுக்கு 3 தான் வந்துச்சி,-3 (நான் தான்) சொன்னவனுக்கு ஹாஹா +13 மார்க் (ஆண்டவன் நல்லவங்கள கைவிட மாட்டான் ஹா ஹா),செம சிரிப்பு தான் எனக்கு :))
எவண்டா எனக்கு +13 போட்டதுன்னு எனக்கு டவுட்டு வேற,அதனால ரிசல்ட் உண்மையான்னு ஒரு பத்து,பதினைந்து தடவையாவது பாத்திருப்பேன்(நம்பவே முடியல)
எல்லா பயலுவோலும் கேட்டானுங்க எப்டி டா எடுத்த வெரி குட் டா, நான் சொன்னேன் அதெல்லாம் புத்திசாலிங்களாலதான் முடியும் டா(ஒத்தயா ரெட்டயா போட்டதுல வந்ததுன்னு சொல்லிடுவேணா)
நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும் ,அதனாலதான் என் மார்க் ஸ்டேட்மன்டையே இங்கே போட்டுட்டேன் (நேர்மை,பொறுமை,எருமை)
இவ்வளவு பொறுமையாக படித்த அனைவருக்கும் மிக்க நன்றி !!!