ஆ........

அப்போது மணி  இரவு  எட்டை தாண்டியிருக்கும் ப்ரித்வி தோசையை விழுங்கிக்கொண்டிருந்தான், முறுவலா ஒரு தோசை என்று சித்தியிடம் ஆர்டர் செய்துவிட்டு எண்ணெய் ஜாடியை எடுக்க விழைகையில் ஒரு சத்தம்

டொக் டொக் !!
ஹாய் மச்சான்  !!

நண்பன் மணி அரட்டை பெட்டியில் கூப்பிடுரான் ஹாய் மச்சி தோ வாரேன்னு இவன் உரத்த குரலில் தன்னை அறியாமல் கத்திவிட, சித்தி டேய் என்னடா யாருகிட்ட பேசுற இங்க யாருமே இல்லயே, எதாவது போன் கீன் வந்துச்சாடா

சீ ஒன்னுமில்ல என்று தலையில் தட்டிக் கொண்டு தோசை போன்றே முறுவலான ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எழுந்தான்.

மாடிப் படிகளில் சட்டென தாவி மேல சென்ற போது கடிகாரம் சரியாக 9.30 ஐ காட்டிக் கொண்டிருந்தது, சரி எதாவது படிக்கலாமேன்னு அலமாரியில் கலைந்து கிடந்து புத்தகங்களில் ஒன்றை எடுத்து நாலு பக்கம் மேய்ந்து கொண்டிருக்கையில் 

இன்னும் ஓர் இரவு ! இன்னும் ஓர் நிலவு  
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா ! 
என் நெஞ்சிலொரு பூ பூத்ததன் பேர் என்னவென கேட்டேன் !! 
இரும்பிலே இருதயம் முளைக்குதே !

என்று கன்னாபின்னாவென்று பாடல்கள் மாறி மாறி  இவன் காதுமடலருகில் காட்டுக் கத்தலில் ஒலித்துக் கொண்டிருந்தது, மண்டையே வெடித்துவிடும் போன்ற உணர்வு  மூளை நரம்புகள்  முறுக்கிக் கொள்வைதை போல ஒரு வலி, சட்டென தன் காதில் இருந்த ஹெட்போன பிய்தெடுக்க முயற்ச்சிக்கையில் காதில் ஹெட்போனே இல்லை, பின் எப்படி இந்த சத்தம் 

அலைபேசியை சுண்டிப் பார்க்கையில் அதிலும் பாடவில்லை, அந்த சத்தத்தின் படபடப்பு அடங்கவில்லை, ஜன்னலில் எட்டிப் பார்த்தான்...மொட்டை மாடியில் ஏறி தெருவை வெறித்து பார்த்தான்...குளிரில் குட்டி நாய் ஒன்று அலரிக் கொண்டிருந்த சத்தம் மட்டும் தான்..அப்படி ஒரு அமைதி...


பதட்டத்தில் பத்து படிகள் மதமதவென குதித்திறங்கி ஆக்வாசியூரில் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை மூன்று தம்ளர்கள் குடித்திருப்பான்..அப்போது சித்தப்பா காலை சாப்பாட்டுக்கு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தார் ..அவரிடம் இதை சொல்லலாமா என்று ஒரு நொடி  யோசிக்கையில் அனிச்சையாக கால்கள் படிகளில் செலுத்தப்பட்டு மீண்டும் மாடிக்கே வந்தான் 

இந்த உணர்வு என்னவென்று அவனுக்கு புரியவில்லை...இதை டைரியில் எழுதிவிடுவொம், என்னன்னு அப்பரம் ஓசிக்கலாம்னு..தன் மெத்தைக்கடியிலிருந்த டைரியை எடுத்து பிப்ரவரி 16-ஐ தேடி  இந்த உணர்வை எப்படி எழுதுவது என்று மனசுல ஒருவாரு எழுத்துக்களை கோர்த்து கொண்டு 
எழுத பேனாவை டைரியில் கைவைக்க அங்கொரு அதிர்ச்சி 

தான் மனதில் கோர்த்த எழுத்துக்கள் டைரியில் அச்சுபிசகாமல் அச்சடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் டைரியை வீசிவிட்டான்...இரவின் தனிமையில் பயம்  என்னவென்றே புரியாமல் மொசேக் தரையில் சப்பணக்கால் போட்டுக் உட்கார்ந்து தலையை சொரிந்து கொண்டே இருந்தான் 

தலை முடியெல்லாம் உதிர்ந்து தலைபாரமே இல்லாமல் போன்றிருந்தது  ....தன்னையறியாமல் கண்கள் சொக்கிப் போய் தரையிலேயே தூங்கிப் போய்விட்டான் ப்ரித்வி...

காலை பத்து பதினோரு மணியிருக்கும் மீண்டும் அந்த சத்தம் 
 
டொக் ! டொக்
 
இப்போது கணிப்பொறிக்குள்ளிருந்து வந்தது..மேசையிலிருந்த சுட்டியை திரையில் நகர்த்தி க்ளிக்கி இவனும் ஹாய் மச்சான் என்று அரட்டையடிக்க ஆரம்பித்தான்

டிஸ்கி :   என்ன பண்றது இந்த சுஜாத புத்தகங்கள படிக்கிறதும் , கம்பிபிட்டர  நோண்டுறதுமே பொலப்பா இருந்தா இப்பிடித்தான் எதாவது சம்மந்தமில்லாம  தோணுமாம் 




Related Posts with Thumbnails