நானும் அந்த 140 எழுத்துக்களும்
என்னத்த சொல்றது போங்க, இப்பலாம் எது யோசிச்சாலும் சரி எழுதினாலும் சரி எல்லாமே சின்னாதாவே வருது,பரிட்சையில 16 மார்க் கேள்விக்கும் ரெண்டு மார்க் கேள்விக்கும் ஒரே அளவு பதில் தான் வருது
எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்,அவன்தாங்க ட்விட்டர் , இனி பரிட்சை கேள்வி தாளில் எல்லா வினாக்களுக்கும் 140 எழுத்துக்களில் விடையளின்னு இருந்தா கூட தேவலாம் என்கிற அளவுக்கு என்னை ட்விட்டர் அடிமையாக்கி இருக்கிறது
நிறைய மொக்கை கவிதலாம் எழுதுறன் அதுக்கு காரணம் "அவள்" இல்ல ட்விட்டர் தான்,இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா என்னோட பதிவும் 140 எழுத்துக்கு சின்னதா ஆனாலும் ஆகும்
ட்விட்டர் இன்னக்கி இணையத்தின் இன்றியமையாததாகிவிட்டது, ட்விட்டருக்கு முன் கூகுளின் ஆர்குட்டும்,மூஞ்சி புத்தகமும் டம்மி பீசுகளாய் வளம் வந்து கொண்டிருக்கின்றன (இன்னமும் யாராவது ஆர்குட் யூஸ் பண்றீங்களா என்ன :) )
எது நடந்தாலும் ஊருக்கு முன்னாடி முதல்ல ட்விட்டேருக்கு சொல்லிடுறேன், வாந்தி வந்தாலும் சொல்றன், பூந்தி தின்னாலும் சொல்றன், மொத்ததுல ட்விட்டர் ஒரு குட்டி நண்பன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி வந்தது வந்துட்டீங்க சில பல ட்விட்டுகளை படிச்சிட்டு போங்க :)
@@ அவள் அன்று கண்களால் கடித்ததால் ஏற்ப்பட்ட காதல் புண் இன்று வடுவாகியும் சுகமாய் வலிக்கிறதே #காதல் சுகம்
@@ போன வாரம் சுட்ட ஊசிப் போன வடையை கூட சகித்து சாப்பிட்டு விடுவேன் இந்த பாழாய் போன பீசாவை எவன் திம்பான் #பிசா கார்னரின் கார்னரில்
எல்லாம் நல்லா இருக்கு. கொஞ்சம் எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்.
@நாகராஜசோழன் MA
ரொம்ப நன்றி தல :)
எழுத்துப் பிழைகளை தவிர்க்க இன்னும் கவனமா இருக்கேன் தல
////@@ அவளின் நினைவலையின் எச்ச சொச்சங்களை பொறுக்கி பொட்டலம் போட்ட நேரத்தில் அப்பா கடையில் பொட்டலம் போட்டிருந்தால் எப்பவோ பொழச்சிருக்கலாம் #toolate .////////////
நல்ல இருக்கு நண்பரே ஒவ்வொன்றிலும் நகைச்சுவை
ததும்புகிறது அதிலும் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது . பகிர்வுக்கு நன்றி .
இது போன்று எதார்த்த நடையில் எழுதும்பொழுது எழுத்துப் பிழைகள் வருவது சாத்தியமே ! தளராமல் தொடர்ந்து எழுதுங்கள் ஒவ்வொரு பதிவிலும் புதுமைகள் செய்து கலக்குறிங்க வாழ்த்துக்கள் !. நேரமின்மை அதுதான் தொடர்ச்சியாக வருகை தர இயலவில்லை . தொடருங்கள் இனி மீண்டும் மீண்டும் வருவேன்
மிக அருமை!
உங்களுக்கும் டிவிட்டர் நண்பர்களுக்கும் ’மினி இலக்கியவாதிகள்’ என்ற பட்டத்தை அளிக்கிறேன்! :-)
என்ன மச்சி அவள இன்னும் நிறைய சொல்லுவன்னு நினைச்சேன் !
நல்லா இருக்கு டா ! :)
விளம்பரம்:
சரக்கு அடிக்கலாம் வாங்க !
http://last3rooms.blogspot.com/2010/10/blog-post.html
படிச்சு பாருங்க :)
திரும்ப ஆரம்பிச்சிட்டாண்டா!!!!! சரி ரைட்டு விடு....
என்னிக்காவது காலேஜ் போனியா?
என்னிக்காவது காலேஜ் போனியா?
சாமி, தனி தனியா facebook, google status ன்னு போட்டது இல்லமா, இங்க வேற ஒட்டு மொத்தமாவா? நீ நடத்து...
ஜில்லு...முகப்புத்தகத்திலும் இதே லொள்ளு இங்கயுமா...
meeeeeeeee
the first...
nalla erukku anney.
//மூன்று வருடம் முக்கி முனகி அவள் முன்னால் மண்டியிட்டு மாரடித்த மணித்துளிகளில் மரணித்து மக்கியிருந்தால் மனிதனாயிருக்கலாம்//
ஜில்லு நீயாப்பா இது சொன்ன?! கலக்கு :)
ஒரு மார்க்கமாத்தான் போய்கிடு இருக்கு
//போன வாரம் சுட்ட ஊசிப் போன வடையை கூட சகித்து சாப்பிட்டு விடுவேன் இந்த பாழாய் போன பீசாவை எவன் திம்பான் #பிசா கார்னரின் கார்னரில்//
கவிதை எல்லாம் நல்ல இருக்கு ...குறிப்பாக இது ரொம்ப நல்ல இருக்கு (கைல காசு இல்லையா .........அல்லது சீ சீ இந்த பழம் புளிக்கும் கதையா)
90க்கு அப்புறம் அதிகம் சொல்லப்படுகிற நம்பர்......
ரொம்ப நாளைக்கு அப்புறம், வந்து இருக்கீங்க போல.... :-)
// ட்விட்டருக்கு முன் கூகுளின் ஆர்குட்டும்,மூஞ்சி புத்தகமும் டம்மி பீசுகளாய் வளம் வந்து கொண்டிருக்கின்றன (இன்னமும் யாராவது ஆர்குட் யூஸ் பண்றீங்களா என்ன :) )//
ஆர்குட் பயன்படுத்துறது இல்லை .. ஆனா மூஞ்சிப் புத்தகம் பயன்படுத்துறோம் .. என்னை பொறுத்த வரை டுவிட்டர விட மூஞ்சிப் புத்தகம் நல்லா இருக்கு .. ஒரு வேளை எனக்கு டுவிட்டர பயன்படுத்த தெரியலையோ ..?
நல்லா ட்விட்டி இருக்கீங்க.
ஆனா நடுவுல காணாம போயிட்றீங்களே ஜில்லு??
@@ இந்திரா said...
/// நல்லா ட்விட்டி இருக்கீங்க.
ஆனா நடுவுல காணாம போயிட்றீங்களே ஜில்லு?? ///
ஆமாங்க நடுவுல ரெண்டு மாசம் வர முடியல :)
இது ஜில்லு ரிட்டன்சு :) நன்றி
ஜில்லு எங்க ரொம்ப நாளா ஆளையே கானோம்..
@@@ Riyas said...
/// ஜில்லு எங்க ரொம்ப நாளா ஆளையே கானோம்.. ////
காலேஜ் சேந்ததுனால இந்த பக்கம் அவ்வளவா வர முடில :)
இனி கண்டிப்பா வந்துருவேன் :)
அனைத்து ட்விட்டுகளையும் ரசித்தேன்.உனக்குள்ள நெறய இருக்கும் போல.பரவா இல்ல எடுத்து விடு ஜில்லு
சாரி ஜில்லு வர வர சாப்பிட கூட நேரம் இல்ல.அதன் உன்னோட பதிவ படிக்க முடியல.
@@ என்னதான் செக்க செவேலுன்னு இருந்தாலும் சேட்டு பொண்ணுங்கள பாத்தா ஜொள்ளு விட தோணல #என்னுமோ தெர்ல
//
வாஸ்தவம் தான்.ஆனா அவளுக பண்ற அலும்பு இருக்கே அப்ப அப்பப்பா தாங்க முடியாது.ஒரு வாட்டி தெரியாம திருப்தி போனப்ப லைன்ல நின்னுகிட்டு இருந்தப்ப பேசியே என்னய கொன்னுடாலுக.
///@@ தோழியிடம் மீசையை எடுத்தால் கமல் மாதிரி இருப்பேனா என்றேன்,ஆம் என்றாள் எடுத்துவிட்டேன் அப்பரம் தான் சொல்கிறாள் அது "குணா" கமல் என்று #அழகு///
நல்ல வேளை ஆழவந்தான் கமல்ன்னு சொல்லாமல் விட்டாளே......
என்னய்யா ஜில்லு.. சவுக்கியமா..