நீங்களும் ரசிங்க - கராத்தே கிட்
ஞாயிற்று கிழமை வீட்ல வெட்டியா தானே இருக்கோம்,சரி ஏதாவது படத்துக்கு போகலாம்னு யோசிச்சப்ப நினைவுக்கு வந்தது தி கராத்தே கிட்,ஜெட்லி அண்ணன் எழுதுன விமர்சனம் தான் இந்த படத்தை யோசிக்க வைத்தது,
நண்பனுக்கு போன் போட்டு தி கராத்தே கிட் படத்துக்கு போகலாமாடான்னு கேட்டேன்,என்ன தர டிக்கட்டா என்று கேட்டான் சிரித்து விட்டேன்,ஒரு வழியா ஃபைனலைஸ் பன்னி,மாலை ஷோ போணோம்
விமர்சனமெல்லாம் நிறைய பேர் பண்ணிட்டாங்க..
நான் ரசித்தவைகளை பகிர்ந்து கொள்கிறேன்
* ஆரம்பத்திலேயே என்னை கவர்ந்தது ஜேடன் ஸ்மித்தின் தலை முடிதான்
* அவனை பார்த்து இது ஆம்பளையா இல்ல பொம்பளையா என்று பின்புறத்தில் கேட்டது,சிரித்து விட்டேன்
* பனிரெண்டு வயது சிறுவன் ஸ்மித் அந்த சிறுமியயை பார்த்து அசடு வழிந்ததும் ஓரே சிரிப்பு தான்
* வில்லன் சிறுவன் முதல் அடியே இடி போல் வியக்க வைத்தது,நல்ல நுணுக்கமான வெளிப்பாடு
* கிழ சிங்கம் ஜாக்கி நடை வித்யாசமாக இருந்தது,வயது முதிர்ச்சியை காட்ட அப்படி செய்தார்களா தெரியவில்லை
* திருவிழா ஒன்றில் நம்ம ஹீரோவும் அந்த சிறுமியும் முத்தம் கொடுக்குறது கொஞ்சம் ஓவர் தான்
* கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும் சிறுவன் ஸ்மித்தின் நடிப்பு அசத்தல் தான்
* குருவாக ஜாக்கி மிளிர்கிறார்
* தற்காப்புக்காகத்தான் இந்த குங்க்ஃபூ கலையை கற்க வேண்டும்,அடிப்பதற்க்கல்ல என்று சொல்லும் ஜாக்கியிடம் பக்கா குங்க்ஃபூ தெரிந்தது
* சட்டையை அவிழ்த்து,மாட்டி,கீழே போடடும் அந்த பயிற்சியின் மூலம் குங்க்ஃபூ சொல்லிக் கொடுத்தது எதிர்பார்க்காதது
* முத்தமும் கொடுத்து விட்டு அந்த சிறுமியின் அப்பாவிடம் நாங்க சிறந்த நண்பர்கள் தான் என்று சொல்லும் போதும் சிரிப்பு தான்
* போட்டியில் வழக்கம் போல் ஒரு புறம் வில்லனும் மற்றொறு புறம் ஹீரொவும் அரையிருதிக்கு முன்னேருகிறார்கள்
* அரை இறுதியில் திட்டமிட்டு ஸ்மித்தின் கால் முறிக்கப்பட்டதும் அரங்கமே நிசப்தம் தான்
* மீண்டும் எழுகிறான் ஹீரோ,ஒரே கைதட்டல் தான்
* கடைசியில் வெளிப்பட்ட கோப்ரா குங்க்ஃஃபூ மூலம் வெற்றி பெறுகிறான்
* நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்:
வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் நின்று விடக் கூடாது,போராட வேண்டும்
*கண்டிப்பா எல்லோரும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்
நண்பரே நான் இன்னும் இந்த படம் பார்க்க வில்லை உங்களின் விமர்சனம் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்து இருக்கிறது விரைவில் பார்த்துவிடுகிறேன் . உங்களுக்கு பிடித்த அதே தலை முடிதான்
எனக்கு பிடித்து இருக்கிறது . புகைப்படம் மிகவும் அருமை .
அப்ப ஓசி டிவிடி வாங்கிட வேண்டியதுதான்
நல்ல கருத்து சொல்லிருக்காங்க போல..
ஜில்தண்ணி...நீங்கள் எழுதியது படத்தை மீண்டும் ஒரு முறை ரீகாப்
செய்த மாதிரி இருந்தது......
பகிர்வுக்கு நன்றி... படம் பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளீர்கள்.
ஜில்லு.... நான் இன்னும் பார்க்கல...
// *கண்டிப்பா எல்லோரும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் //
பார்த்துடுவோம்.!
டிவிடி வாங்கிட வேண்டியதுதான்
:)
நேத்துதான் பாத்தேன். கண்டிப்பா எல்லோரும் பார்க்க வேண்டிய படம் தான்...
நானும் கேள்விப்பட்டன் நல்ல படம்னு.. இனிதான் பார்க்கனும் யாரிட்டாயாவது DVD இருந்தா கொடுங்கப்பா...
கண்டிப்பா பார்க்கனும் ஜில்தண்ணி..
வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் நின்று விடக் கூடாது,போராட வேண்டும்//
பாஸ் அந்த சிறுவன் கால் ஒடிஞ்சு எழுந்து நின்றதால்தான் ஜெயிச்சான், நீங்க என்னடான்னா நிக்க கூடாதுன்னு சொல்றீங்க:)))
ஒரே கொழப்பமா இருக்கே
ஆஹா குசும்பன் அண்ணே வாங்க
எப்புடி தான் யோசிக்கிறீங்களோ என் பாயிண்ட வச்சி என்னையே மடக்குறீங்க
ஹீ ஹீ ஹீ
வருகைக்கு நன்றி
//நம்ம ஹீரோவும் அந்த சிறுமியும் முத்தம் கொடுக்குறது கொஞ்சம் ஓவர் தான்//
எனக்கும் அதே வயித்தெரிச்சல் தான் :)
ஜில்லு.,
கண்டீப்பா டிவிடி பார்கிறேன்...நீர் ரெகமண்ட் பன்னினதால..
இன்னைக்கு சாயங்காலம் பார்க்க வேண்டியது தான் ..
பகிர்வுக்கு நன்றி நண்பா.
நல்ல பதிவு.அப்பப்ப படம் பத்தி எழுதுங்க.