அறிவியல் வாத்தியார் - 3
மாலை வணக்கம் ஐயா
வணக்கம் வணக்கம்,என்னடா ஒரு வாரமா ஆள காணோம்
என்னோட ஆளு ஊர்லதான்யா இருக்கா,இப்பதானே பாத்தேன்
அது வேறயா ,சரி சரி நடத்து நடத்து
ஏதாவது சந்தேகம் இல்லாம வரமாட்டையே,என்ன ?
இந்த இசைக்கும் - சத்தத்துக்கும் என்ன வித்யாசம்யா ?
அதாவது இசையும்,சத்தம் இரண்டுமே ஒலி தான்
இரண்டுமே அதிர்வ்களால் உருவாவது தான்
இசை சீரான அதிர்வுகளால் உருவாவது
சத்தம் தாறுமாறான அதிர்வுகளால் உருவாவது
அவ்வளவுதான்..
ஹ ஹ ஹச்ச்ச்ச் .......................
ஐயா இந்த தும்மல் ஏன் வருகிறது ?
ம்ம்ம் சொல்றேன்
முதல்ல தும்மும் போது கைக்குட்டையை வைத்து மூடி கொண்டு தும்மு,சரியா
மூக்கில் உள்ள மெல்லிய சவ்வின் நரம்பு நுனிகள் தூண்டல் ஏற்படும் போது தும்முகிறோம், மூச்சை உள்ளே இழுக்கும் போது தூசி அல்லது பூந்தாதுக்கள் உள்ளே செல்வதாலோ,ஒவ்வாமை,மூக்கடைப்பு இருந்தால் கூட வரும்
மூக்கில் இருக்கும் அன்னியப் பொருளை (foreign particles) காற்றின் மூலம் வெளியேற்ற உதவும் ஒரு அனிச்சை செயலே(reflex action ) தும்மல்
போன வாரம் கராத்தே கிட் படத்துக்கு போனோம்,நண்பன் ஒருத்தன் பாப் கார்ன் வாங்கினான் (எனக்கு ஓசி ),அத பொரிக்கும் போது அந்த குதி குதிக்குதே அது ஏன் ?
படம் எப்டி இருந்தது
வூட்ல பொய் நான் ரசித்ததை படிங்க
பாப் கார்ன் செய்ய பயன் படும் சோளம் ஒரு வித கடினத் தன்மை கொண்டதாகும்,நடுவில் சிறிய அளவு பருப்பும் அதைச் சுற்றி கடினமான மாவுப் பொருளும் இருக்கும் மற்றும் 10 முதல் 15 சதவீதம் ஈரப்பசை
கீழே இருக்கும் ஈரப்பசை சூடாகி ஆவியாக பலமடங்கு பெரிதாகும் ,அந்த மாவு பொருளை பிளந்து கொண்டு வெளியே வரும்,அதனால் தான் குதிக்கிறது
மொக்கை சார் ...
//பாப் கார்ன் செய்ய பயன் படும் சோளம் ஒரு வித கடினத் தன்மை கொண்டதாகும்,நடுவில் சிறிய அளவு பருப்பும் அதைச் சுற்றி கடினமான மாவுப் பொருளும் இருக்கும் மற்றும் 10 முதல் 15 சதவீதம் ஈரப்பசை
கீழே இருக்கும் ஈரப்பசை சூடாகி ஆவியாக பலமடங்கு பெரிதாகும் ,அந்த மாவு பொருளை பிளந்து கொண்டு வெளியே வரும்,அதனால் தான் குதிக்கிறது/////
புதுமையான பதிவு நண்பரே அறியாத தகவல் அறிந்து கொண்டேன்
அருமை Mr.Jill
புதுமையான தகவல், அறிந்து கொண்டேன்
போடுங்க சார்..போடுங்க...
நல்ல முயற்சி! கராத்தே கிட் விமர்சனம் இப்பத்தான் படித்தேன்! :))
அறிவியல் வாத்தியார், அவ்வளவாக கண்டுகொள்ளப்படாத விஷயங்கள் பற்றி கொஞ்சம் விலா வாரியாக எழுத முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்!
புதுமையான தகவல்...
nandri nalla visayangal jill
நல்ல பகிர்வு நண்பா...
பாப்கார்ன்... படம் சூப்பர்....
கலக்கல் ஜில்..
பாப்கான் ஓ.கே
அப்படியே.. கடுகை எண்ணெய்ல போட்டமும் குதிச்சு தெரிச்சு ஆளக்கொல்ல பார்க்குதே இதையும் கேட்டுருங்க.. அப்ப நம்ம தல ஜெய்லானி சந்தேகம் தீரும்
நல்லப்பதிவு. ஜில்ஜில்